Published : 19 Jun 2023 06:01 AM
Last Updated : 19 Jun 2023 06:01 AM
புகழ் பெற்ற கணிதவியலாளர், தத்துவஞானி பிளைஸ் பாஸ்கல் 1623 ஜூன் 19-ம் தேதி பிரான்ஸில் உள்ள கிளர்மான்ட் நகரில் பிறந்தார். தனது 3 வயதில் தாயை இழந்தார். பாஸ்கலுக்கு அடிக்கடி உடல்நலக் குறைவு ஏற்பட்டது. அதனால் அவரின் தந்தை வீட்டிலேயே கணக்கு, அறிவியல், மொழி பாடங்களை கற்றுத் தந்தார்.
அவர் எழுதிய கட்டுரைகளைத் தொகுத்து ‘தி ஜெனரேஷன் ஆஃப் கோனிக் செக்ஷன்ஸ்’ என்ற பெயரில் தன்னுடைய முதல் ஆராய்ச்சி நூலை 1639-ல் வெளியிட்டார். வடிவியலில் பெரிய சாதனையான கூம்பு வெட்டுகள் பற்றி 16 வயதில் நீண்ட கட்டுரை எழுதினார். அதுவே தற்போது நடைமுறையில் ‘பாஸ்கல் தேற்றம்’ என்று பயன்படுத்தப்படுகிறது.
1642-ல் தந்தைக்கு அலுவலக கணக்குப் போடுவதில் உதவுவதற்காக, 3 ஆண்டுகள் கடுமையாக உழைத்து கால்குலேட்டரை கண்டுபிடித்தார். 1653-ல் நீரின் அழுத்த விதியைக் கண்டறிந்து, வெளியிட்டார். இது ‘பாஸ்கல் விதி’ எனப்படுகிறது.
வாயு மற்றும் திரவவியலைக் குறிக்கும் பாய்ம இயக்கவியலில் அழுத்தம் பற்றிய இவரது விதி உலகப் புகழ்பெற்றது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT