Published : 27 Feb 2023 06:12 AM
Last Updated : 27 Feb 2023 06:12 AM
உங்க வீட்டு சேவல் கூரை மேலே ஏறி முட்டை போட்டால் வடக்கு பக்கம் விழுமா? தெற்கு பக்கம் விழுமா? எந்த ஊர்ல சேவல் முட்டை போடும்? இதுதான் அந்த கேலியான புதிருக்கான விடை. ஆனால், இங்க ஒரு காட்டுல சேவல் ஒன்று முட்டை போட்டு விட்டது தெரியுமா? வாங்க கதைக்குள் போய் பார்க்கலாம்.
மனிதர்கள் உருவாவதற்கு முன்னால் ஒரு காட்டில் பேசும் விலங்குகள் வாழ்ந்தன. எல்லா விலங்குகளும் தங்களுடைய குழந்தைகளை ஒரு பள்ளிக்கு அனுப்பி படிக்க வைத்தன. அங்கு ஒரு சேவல் டீச்சர் இருந்தார். அவர் பெயர் குமரவேல். குமரவேல் டீச்சர் வகுப்பில் ரெண்டு சோம்பேறி குரங்குகள் இருந்தன.
எல்லோரும் சுறுசுறுப்பாக டீச்சர் சொல்றதை எல்லாம் கேட்டு அதன்படியே நடந்துகொண்டன. ஆனால், இந்த ரெண்டு குரங்குகள் மட்டும் சாப்பிட்டு தூங்குவதையே வேலையா செய்தன. இதை கவனித்த டீச்சர், இதற்கு ஒரு முடிவு கட்ட வேண்டும் என்று நினைத்தார்.
ஒரு நாள் காலையில் வகுப்பிற்கு வந்ததும் இன்னைக்கு உங்களுக்கு பிராக்டிகல் டெஸ்ட் என்று மாணவர்களிடம் சொல்லி விட்டார். அப்போதும் அந்த குரங்குகள் அலட்சியம் செய்தன. கதிரறுத்த நெற்தாள்களை கட்டாக கட்டி ஆளுக்கு ஒரு கட்டுன்னு கொடுத்தார் டீச்சர். இதை வைத்துத்தான் இன்று நீங்கள் சமைத்து சாப்பிட வேண்டும் என்று சொன்னார். மற்ற விலங்குகள் எல்லாம் டீச்சர் கொடுத்த டெஸ்டை கவனமா ஓடி ஓடி செய்தன. இந்த ரெண்டு குரங்குகள் மட்டும் வழக்கம் போல படுத்து தூங்கின.
அடுத்த நாள் காலையில் பள்ளியில் இருந்த நோட்டீஸ் போர்டில் ஒரு லிஸ்ட் ஒட்டப்பட்டது. அதில் பிராக்டிகல் டெஸ்ட் ரிசல்ட் மார்க் வந்தது. அதில் ரெண்டு குரங்குகளுக்கும் லிஸ்ட்ல முட்டை வந்தது. இப்ப சொல்லுங்க சேவல் போட்ட முட்டை எங்க விழுந்தது? 7-ஆ, எஸ்.ஆர்.வி.சீனியர் செகண்டரி பப்ளிக் பள்ளி, திருச்சி.
- செ.வெ.தேவசேனா
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT