Last Updated : 21 Feb, 2023 06:16 AM

 

Published : 21 Feb 2023 06:16 AM
Last Updated : 21 Feb 2023 06:16 AM

உலக தாய்மொழி நாள் | அழியும் இந்திய மொழிகள்

இந்தியாவில் நூற்றுக்கணக்கான மொழிகள் இருந்தாலும் அடையாளம் காணப்பட்டவை, 270 மொழிகள் மட்டுமே.

l 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, இந்தியாவில் 121 மொழிகள் 10,000-க்கும்அதிகமானோர் பேசுபவையாக உள்ளன. இதில், இந்திய அரசமைப்பின் 8ஆவது அட்டவணையில் 22 மொழிகள் பட்டியலிடப்பட்டுள்ளன.

l அட்டவணையில் பட்டியலிடப்பட்ட மொழிகளைத் தாய்மொழியாகக் கொண்ட இந்தியர்கள் 96.71 சதவீதத்தினர். பீப்பிள் லிங்க்விஸ்டிக் சர்வே இந்தியா (PLSI) அமைப்பின் ஆய்வறிக்கையின்படி இந்தியாவில் கடந்த 50 ஆண்டுகளில் 220-க்கும் அதிகமான மொழிகள் அழிந்துள்ளன.

l இந்தியாவில் தற்போதைய நிலையில் மக்களால் பேசப்பட்டு வரும் 42 மொழிகள் அழியும் நிலையில் இருக்கின்றன. இந்த மொழிகளை 10,000க்கும் குறைவானவர்களே பேசி வருகின்றனர்.

l இந்த 42 மொழிகளில், அதிகபட்சமாக அந்தமான்-நிகோபார் தீவுகளில் 11 மொழிகள் அழியும் நிலையில் இருக்கின்றன. மணிப்பூரில் 7 மொழிகள், இமாச்சலப் பிரதேசத்தில் 4 மொழிகளும் ஒடிஷாவில் 3 மொழிகளும் அழியும் நிலையிலுள்ள மொழிகளின் பட்டியலில் அடக்கம்.

l தமிழ்நாட்டில் கோத்தா, தொதவா மொழிகள் அழியும் பட்டியலில் இடம் பிடித்துள்ளன. இவை முறையே நீலகிரி கோத்தர்கள், தொதவர்கள் பேசும் மொழிகள். அப்பகுதியில் தமிழ் அதிகம் ஊடுருவுவதே இம்மொழிகளின் தேய்வுக்குக் காரணம்.

l 1971 - 2011 வரையிலான காலத்தில் இந்தி மொழி 161 சதவீத வளர்ச்சி கண்டுள்ளது. இதே காலகட்டத்தில் தமிழ் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகள் 81 சதவீத வளர்ச்சியை மட்டுமே கண்டுள்ளன.

l 2001-11 காலகட்டத்தில் இந்தியாவில் ஆங்கில மொழி பேசுவது 15 சதவீத வளர்ச்சியைக் கண்டுள்ளது. இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் மொழிகளில் ஒன்றாக ஆங்கிலமும் உள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x