Published : 05 Aug 2022 06:14 AM
Last Updated : 05 Aug 2022 06:14 AM

வெற்றி நூலகம்: இந்தியா எனும் சொல் வந்தது எப்படி?

இது நடந்தது பல ஆண்டுகளுக்கு முன்பு. ஒரு நாள் விடிகாலை நேரம், திடீரென்று இந்தியா உறக்கத்திலிருந்து எழுந்துகொண்டது. எனக்கு இந்தியா என்று பெயர் வைத்தது யார்? அதன் அர்த்தம் என்ன? யாருக்காவது தெரியுமா? புத்தகங்களை எடுத்து வைத்துக் கொண்டு தேடத் தொடங்கியது இந்தியா.சமஸ்கிருதத்தில் எழுதப்பட்ட வேதங்களை யும் இதிகாசங்களையும் புராணங்களையும் ஒன்றுவிடாமல் படித்துப் பார்த்தது. இந் தியா என்னும் பெயர் எங்குமே இல்லை...

இப்படி தொடங்குகிறது “இந்தியா என்றால் என்ன?” என்ற தலைப்பிட்ட ஒரு கதைக்கட்டுரை. மிக சுவாரசியமான நடையில் இந்தியாவின் பெயர் காரணத்தை வரலாற்று பூர்வமாக கண்டடைகிறது இந்தப் பகுதி.

பக்கவாட்டிலும் அழகிய லுடன் கூடிய ஓவியமும் வாசகரை உள்ளுக்குள் இழுத்துக் கொள்கிறது. இந்த கதைக்கட்டுரை மட்டுமல்ல “இந்தியாஎன்றால் என்ன?” புத்தகத்தில் இடம் பெற்றுள்ள அத்தனை கட்டுரைகளுமே சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் ரசித்து வாசிக்கத் தூண்டக்கூடியவை.

டால்ஸ்டாய், காந்தி, தாகூர், ஏங்கெல்ஸ், அக்பர், ஐன்ஸ்டைன், அம்பேத்கர், சாக்ரடீஸ் போன்ற உலகம் வியந்த ஆளுமைகள் பற்றிய அரிய தகவல்களும் கதை வடிவில் அதிலும் மென் நகைச்சுவை உணர்வு கூட்டி இப்புத்தகத்தில் சொல்லப்பட்ட விதம் எல்லோ ரையும் வாசிப்பை நேசிக்க வைக்கும்.

75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு “இந்து தமிழ் திசை” வெளியீடான “இந்தியா என்றால் என்ன?” புத்தகம் சிறப்பு தள்ளுபடியில் விற்கப்படுகிறது. நாளை (6 ஆக.,) முதல் ஆக.,15-ம் தேதிக்குள் இப்புத்தகத்தை வாங்குபவர்களுக்கு 20 சதவீதம் சிறப்புத் தள்ளுபடி வழங்கப்படும். அஞ்சல் செலவின்றி புத்தகம் உங்களை வந்து சேரும்.

ஆன்லைனில் பெற: store.hindutamil.in/publications

மேலும் விவரங்களுக்கு: 7401296562 / 7401329402

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x