Published : 21 Jul 2022 06:18 AM
Last Updated : 21 Jul 2022 06:18 AM
சென்னை: ஒருகாலத்தில் ஐஏஎஸ், ஐபிஎஸ் தேர்வில் தமிழக மாணவர்கள் அதிக எண்ணிக்கையில் வெற்றி பெற்று வந்தனர். இவர்கள் எல்லோரும் 1980, 1990-களில் ஐஏஎஸ் பணியில் சேர்ந்தவர்களாக இருப்பார்கள்.
ஆனால், அதன்பிறகு ஐஏஎஸ் தேர்வில் வெற்றி பெறும் தமிழக மாணவர்களின் எண்ணிக்கை மெல்ல மெல்ல குறையத் தொடங்கியது.
2000-ம் ஆண்டுக்குப் பிறகு மீண்டும் பழைய நிலை திரும்பியது. ஐஏஎஸ் தேர்வில் தமிழக மாணவர்கள் அதிக எண்ணிக்கையில் வெற்றி பெற்றதுடன் தேசிய அளவில் முதலிடத்தையும் பிடித்தனர். ஆனால், கடந்த 10 ஆண்டுகளாக ஐஏஎஸ் தேர்வில் தமிழகத்தில் இருந்து தேர்ச்சி பெறுவோரின் எண்ணிக்கை மெல்ல மெல்ல குறைந்து கொண்டே வருகிறது.
கடந்த 2018-ம் ஆண்டு 42 பேரும், 2019-ம் ஆண்டு 35 பேரும், 2020-ம் ஆண்டு 45 பேரும் தேர்ச்சி பெற்றனர். கடந்த மே மாதம் வெளியான தேர்வு 2021-ம் ஆண்டுக்கான சிவில் சர்வீசஸ் தேர்வு முடிவில் வெறும் 27 பேர் மட்டுமே வெற்றி பெற்றுள்ளனர்.
ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎப்எஸ், உள் ளிட்ட பணிகளுக்கான காலியிடங்கள் எண்ணிக்கை குறைந்து வருவது உண்மைதான். காலியிடங்களின் எண்ணிக்கை குறைந்து வருவது ஒருபுறம் இருந்தாலும் தமிழக மாணவர்களின் தேர்ச்சி குறைந்து வருவதையும் ஏற்றுக்கொண்டுதான் ஆக வேண்டும்.
சிவில் சர்வீஸ் தேர்வில் தமிழக மாணவர்களின் தேர்ச்சி குறைந்து வருவதற்கு வெவ்வேறு காரணங்கள் முன்வைக்கப்படுகின்றன. இதுதொடர் பாக கல்வியாளர்கள் மற்றும் போட்டித்தேர்வு பயிற்சியாளர்கள் தெரி விக்கும் கருத்துகளை பார்க்கலாம்.
தமிழக அரசின் அகில இந்திய குடிமைப்பணிகள் பயிற்சி மையத்தின் முன்னாள் முதல்வரும், சென்னை மாநிலக் கல்லூரியின் முதல்வருமான பேராசிரியர் ஆர்.ராமன்: 1980-கள் மற்றும் 1990-களில் தமிழகத்தில் ஐஏஎஸ், ஐபிஎஸ் பணிகள் மீதான ஆர்வம் அதிகமாக இருந்தது. ஆனால், அண்மைக்காலமாக மாணவர்களின் சிந்தனை வேறுவிதமாக இருக்கிறது. அவர்கள் மருத்துவம், இன்ஜினியரிங் படித்துவிட்டு வெளிநாடு செல்ல விரும்புகிறார்கள்.
பொதுவாகவே இன் றைய இளைஞர்கள் அதிக சம்பளம் பெற பொறியியல் படித்துவிட்டு சாப்ட்வேர் நிறுவனங்களில் வேலைபார்க்க விரும்புகிறார்கள். இருந்தாலும்அடுத்த 4 அல்லது 5 ஆண்டுகளில் முன்பு இருந்ததைப் போலவே தமிழகத்தில் இருந்து அதிக எண்ணிக் கையிலான மாணவர்கள் சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றிபெறுவார்கள் என்பது திண்ணம்.
ஃ போகஸ் ஐஏஎஸ் அகாடமி இயக்குநர்எம்.சிபி குமரன்: சிவில் சர்வீசஸ் தேர்வுக்கான தயாரிப்பு முறையில் ஏற்பட்டுள்ள பின்னடைவுதான் வெற்றிவிகித குறைவுக்கு முக்கிய காரணம். தேர்வர்களின் பயிற்சியும் தேடல்களும் குறைவாக இருக்கின்றன. செய்தித்தாள்களை வாசித்து குறிப்பு எடுப்பது, நாட்டு நடப்புகளை கூர்ந்து கவனிப்பது, என்சிஇஆர்டி பாடநூல்களை படிப்பது போன்றவற்றில் ஆர்வம் குறைந்து காணப்படுகிறார்கள்.
பயிற்சி மையங்களை நடத்துவோரும் தேர்வர்களுக்கு பாடத்தின் அடிப்படை விஷயத்தை கற்றுக்கொடுப்பது இல்லை. தேர்வர்களின் விருப்பப்படியே பாடக்குறிப்புகளை கொடுத்து படிக்கச் சொல்கிறார்கள். இந்நிலை மாற வேண்டும்.
குளஞ்சியப்பா ஐஏஎஸ் அகாடமி நிறுவனர் டாக்டர் குளஞ்சியப்பா: மெயின் தேர்வில் கேட்கப்படும் கேள்விகளுக்கு விரிவாக விடையளிக்க வேண்டும். தரமாக விடையளிப்பதில் சற்று தொய்வு உள்ளது. அதோடு நிறைய மாணவர்களால் அனைத்து கேள்விகளுக்கும் விடையளிக்க முடியவில்லை. காரணம் போதிய பயிற்சி இல்லை. நேர மேலாண்மை கிடையாது. மெயின் தேர்வுக்கு அதிக பயிற்சி அவசியம்.
ஆளுமைத்திறன் தேர்வில் பெரும் பாலான தேர்வர்கள் கேட்கப்படும் வினாக்களை நன்கு உள்வாங்கி யோசித்து பதில் அளிப்பதில்லை. சிந்தித்து விடையளிக்கும் திறன்குறைவாக இருக்கிறது. தமிழக மாணவர்கள் இந்த மூன்று விஷயங்களிலும் கவனம் செலுத்தினால் சிவில் சர்வீசஸ் தேர்வில் எளிதாக வெற்றிபெறலாம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT