Published : 22 Oct 2024 06:06 AM
Last Updated : 22 Oct 2024 06:06 AM
பலர் ஒன்றுகூடி செய்யக்கூடிய பணிகளை ஒரே ஒரு ரோபோ செய்து முடிப்பதால் பொதுவாகத் தானியங்கி என்றாலே அச்சம் உள்ளது. இந்நிலையில், ஜெர்மனி நாட்டின் டிரெஸ்டன் நகரத்தில் உள்ள டிரெஸ்டன் தொழில்நுட்ப பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் 3 கைகள் கொண்ட புதியவகை ரோபோவை வடிவமைத்துள்ளனர். இது மனிதர்களின் வேலையைப் பறிக்காது. அதற்கு பதில் மனிதர்களுடன் இணைந்து வேலையை திறம்பட செய்து முடிக்க உதவும் என்பதால் இதற்கு ‘கோபோ’ (collaborative robot) என்று பெயரிட்டுள்ளனர்.
கோபோக்கு இசை நிகழ்ச்சியை நடத்தும் (music conductor) திறனை பிரபல ஜெர்மானிய பியானோ இசைஞர் ஆண்ட்ரியாஸ் கண்டலாஜ் இரண்டாண்டுகளாக பயிற்றுவித்தார். இதையடுத்து, நூற்றுக்கும் அதிகமான இசைஞர்கள் பங்கேற்ற பிரம்மாண்ட மேடையில் நின்று கோபோ கடந்த வாரம் இசை கச்சேரி நடத்தி வரலாற்றில் இடம்பிடித்தது.
இதுபோன்று நீங்கள் எந்த செயலை சிறப்பாக செய்யக்கூடிய ‘கோபோ’வை வடிவமைக்க விரும்புகிறீர்கள் என்பதை 100 சொற்களுக்கு மிகாமல் எழுதி vetrikodi@hindutamil.co.in மின்னஞ்சலுக்கு உங்கள் பெயர், வகுப்பு, பள்ளி விவரம், அலைபேசி எண், புகைப்படத்துடன் அனுப்புங்கள் மாணவர்களே. சிறந்த கட்டுரைக்கு சிறிய பரிசு காத்திருக்கிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT