Published : 29 Jan 2024 04:28 AM
Last Updated : 29 Jan 2024 04:28 AM

காக்கை குருவி எங்கள் தோழன்

எங்களைப் போன்று ‘பறவைகள் இனங்காணல் மன்றத்தில்’ (Bird Watching Club) இணைந்துள்ள மாணவ மாணவிகளுக்கு காலை நேரம் மிகவும் பிடித்தமானதாகும். எங்கள் பள்ளி வளாகத்தில் இதுவரை நாற்பதுக்கும் மேற்பட்ட பறவைகளைப் பார்த்துப் பதிவு செய்து வைத்திருக்கிறோம். அவற்றில் சில:

இந்திய மயில் (Indian peafowl), பொன்முதுகு மரங்கொத்தி (Great flame back Woodpecker), செம்மார்புக் குக்குறுவான் அல்லது திட்டுவான் குருவி (Copper Smith Barbet), பச்சைக் குக்குறுவான் (Brown-headed Barbet), கொண்டலாத்தி (Common Hoopoe), வெண்தொண்டை மீன்கொத்தி (WhiteThroated Kingfisher), பச்சைப் பஞ்சுருட்டான் அல்லது பச்சை ஈப்பிடிப்பான் (Green Bee-eater), செம்பழுப்புத் தலைப்பஞ்சுருட்டான் (Chestnut-Headed Bee Eater), ஆசியக் குயில் (Asian Koel), செம்போத்து (Greater Coucal), செந்தார்ப் பைங்கிளி (Rose Ringed Parakeet), புள்ளி ஆந்தை (Spotted Owl), காட்டுப் பக்கி எனப்படும் இந்திய நைட்ஜார் (Indian Nightjar), மணிப்புறா (Spotted Dove), சிவப்பு மூக்கு ஆள்காட்டி (Red Wattled Lapwing), வல்லூறு (Shikra), பச்சை சிட்டு (Golden fronted Leaf Bird), செம்பழுப்பு வால் காக்கை (Rufous Treepie), 19. காகம் (House Crow), ஐரோவாசியா தங்க மாங்குயில் (Eurasian Golden Orioles), குங்குமப் பூச்சிட்டு (Scarlet Minivet), இரட்டைவால் குருவி அல்லது கரிக்குருவி (Black Drongo), தையல்சிட்டு (Tailorbird), கருஞ்சிட்டு அல்லது இந்திய ராபின் (Indian Robin), வண்ணாத்திக்குருவி அல்லது குண்டுக்கரிச்சான் (Oriental Magpie Robin), மைனா (Common Myna), மலை மைனா (Hill Myna), சாம்பற் சிட்டு அல்லது பெரிய பட்டாணிக் குருவி (Great Tit), செம்மீசைச் சின்னான்அல்லது செம்மீசைக் கொண்டைக்குருவி (Red-whiskered Bulbul), தவிட்டிச் சிலம்பன் (Common Babblers), ஊதாத்தேன்சிட்டு (Purple Rumped Sunbird), சிட்டுக் குருவி (Sparrow), வரி வாலாட்டிக் குருவி (White Browed Wagtail), மஞ்சள் வாலாட்டி (Yellow Wagtail) ஆகியன பொதுவாக எங்கள் பள்ளி வளாகத்தில் காணப்படுகின்றன.

இவற்றோடு வலசை வரும் பறவை|களான, மலபார் கறுப்பு வெள்ளை இருவாச்சி (Great Malabar Hornbill), அரசவால் ஈபிடிப்பான் (Paradise Flycatcher), அந்தமான் பச்சைப் புறா (Green Pigeon), நீலச்சிட்டு (Fairy Blue), இலங்கை தொங்கும் கிளி (Hanging Parrot) ஆகியவற்றையும் பார்த்திருக்கிறோம்.

எங்களைப் போன்று ‘பறவைகள் இனங்காணல் மன்றத்தில்’ (Bird Watching Club) இணைந்துள்ள மாணவ மாணவியர்க்கு காலை நேரம் மிகவும் பிடித்தமானதாகும்.

எங்கள் பள்ளி வளாகத்தை இயற்கையோடு இணைந்து வாழும் உயிரினங் களுடன் பகிர்ந்து கொள்வதில் மிகுந்தமகிழ்வினை அடைகிறோம். பறவைகளைப் பார்ப்பதும் அதன் அழகையும் கண்டு மகிழ்வதும் ஒரு தவம். பள்ளிவளாகத்தில் பறவைகளுக்குத் தானியங்களை அளிப்பதும், அவற்றிற்கு எந்த இடையூறு செய்யாமல் இருப்பதும் எங்களின் பொழுதுபோக்காக இருக்கிறது.இங்குள்ள பறவைகளும், இப்பகுதிக்கே உரிய பட்டாம்பூச்சிகள் மற்றும் பிற பூச்சியினங்களையும் பார்க்கும்போது, இப்பிரபஞ்சத்தில், நாமும் ஒரு சிறுதுளிதான் என்பதனை நினைவூட்டு கின்றன.

‘‘மனிதன் இல்லாத உலகில் பறவைகள் வாழ முடியும்! பறவைகள் இல்லாத உலகில் மனிதன் வாழ முடியாது!’’என்றார், பறவையியல் ஆய்வாளர் டாக்டர் சலீம் அலி. ஆம்! பறவையினங்கள் மனிதனின் வாழ்க்கை சுழற்சியில் முக்கிய பங்கு வகிக்கின்றன என்பது உண்மைதான். அவ்வப்போது கிரீச்சிடும் ஒலியுடன் கூட்டமாய்க் ‘காட்டுச் சிலம்பன்’ எங்களைக் கடந்து செல்வது தனி அழகு என்கின்றனர் கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம், கல்லாறில் உள்ள சச்சிதானந்த ஜோதி நிகேதன் பன்னாட்டு உறைவிடப் பள்ளி, 9-ம் வகுப்பு மாணவர்கள் எல்.இலக்கியா,எஸ். அவந்தி, ஜி.தரன் காசி, ஏ.நந்த கிஷோர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x