Last Updated : 29 Nov, 2023 04:25 AM

 

Published : 29 Nov 2023 04:25 AM
Last Updated : 29 Nov 2023 04:25 AM

புத்தக விமர்சனம்: ஹோய்டி டோய்டி

புஷ் சர்க்கஸில் எந்த சர்க்கஸிலும் இல்லாத சிறப்பு என்னவென்றால் ஹோய்டி டோய்டி என்ற யானை கேட்கும் கேள்விகளுக்கு சரியாக பதில் அளிப்பதுதான். இது கண்கட்டு வித்தை என்று சிலரும், உண்மையாகவே யானையின் அறிவு என்று சிலரும் புகழ்ந்து கொண்டிருந்தார்கள். சர்க்கஸ் பார்க்கச் சென்ற பேராசிரியர் ஸ்மித் யானையோடு உரையாடுகிறார். அவர் கேட்கும் அனைத்து கேள்விகளுக்கும் யானை பதிலளிக்கிறது. ஒருகட்டத் தில் கோபத்தில் அவரை தும்பிக் கையால் தூக்கி வீசுகிறது. ஜங் கோபத்தில் ஹோய்டி டோய்டியை அடிக்கிறார். ஹோய்டி டோய்டி ஜங்க்கை அடித்து விட்டு அங்கிருந்து வெளியேறுகிறது. தீயணைப் புப் படையினர் மற்றும் போலீசாரின் உதவியுடன் ஹோய்டி டோய்டியைத் தேடுகிறார்கள்.

உயிரோடு பிடிக்க முடியாத காரணத்தால் கடினமான போராட் டத்திற்குப் பிறகு சுட்டுக் கொல்வது என்று முடிவு செய்யப்படுகிறது. வாக்னரின் உதவியால் தடுத்து நிறுத்தப்படுகிறது. வாக்னர் ஹோய்டி டோய்டியின் வரலாற்றைக் கூற ஆரம்பிக்கிறார். ஹோய்டி டோய்டிக்கு ரிங் என்ற ஜெர்மனிய விஞ்ஞானியின் மூளை பொருத்தப் பட்டது பற்றியும் நடந்த பல்வேறு ஆராய்ச்சிகள் குறித்தும் கூறுகிறார். ஹோய்டி டோய்டியைப் பற்றி எப்படித் தெரியும்? மனித மூளை யானையின் உடலில் அது மனித னாகச் செயல்படுமா? இல்லை யானையாகச் செயல்படுமா? படிக்கப் படிக்க வியப்பு. காட்டுக்குள் மற்றும் மனிதர்களிடம் அது சந்திக்கும் பிரச்சினைகள் இப்படி கதை நகர்கிறது. படிக்கப் படிக்க சுவாரஸ்யம் முடிவில் ஹோய்டி டோய்டி சர்க்கஸில் மீண்டும் இணைகிறதா? வாசித்து தெரிந்து கொள்ளலாம்.

கதையின் தலைப்பே வாசிக்க வா!வா! என்று அழைப்பது போல் உள்ளது. வாசியுங்கள்! கண்டிப்பாக வித்தியாசமான உலகிற்குள் பயணிப் பீர்கள். வாசிக்கக் கடினமில்லாத மிகச்சிறந்த மொழிபெயர்ப்பு. குழந்தைகளுக்கு யானை பிடிக்கும். சர்க்கஸ் பிடிக்கும். இவை இரண்டும் இருக்கும் இந்தக் கதை பிடிக்காமல் போகுமா? எபெலாயேப் என்ற ரஷ்ய எழுத்தாளர் எழுதி உமா குட்டி அவர்கள் மலையாளத்தில் மொழிபெயர்த்தை எழுத்தாளர் யூமா வாசுகி தமிழில் மொழி பெயர்த்து இருக்கிறார். பாரதி புத்தகாலயம் புக்ஸ் ஃபார் சில்ட்ரன் வெளியிட்டு இருக்கிறது.

- கட்டுரையாளர் எழுத்தாளர்,கதை சொல்லி பழையபாளையம், ஈரோடு.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x