Published : 25 Oct 2023 04:30 AM
Last Updated : 25 Oct 2023 04:30 AM
பள்ளிபருவம் இனிமையானது. உலகில் மிகவும் இனிமையான காலம் என்றால் நாம் அனைவருக்கும் சிந்தித்தவுடனே நினைவில் வருவதுநம்வாழ்வில் மறக்க முடியாததும் ஆழமாகப் பதிந்ததும் நம் பள்ளி பருவம் மட்டுமே. அந்தக் காலம் தாம் நம் வாழ்வின் வசந்த காலம் என்றால் மிகையாகாது, மாணவர்களே நாம் அனைவரும் நம் பள்ளிப்பருவத்தில் ஏதாவது சாதிக்க வேண்டும் என்ற வாஞ்சையுடன் ஒவ்வொரு நாளும் பள்ளியில் ரசித்து ருசித்து சிந்தித்து வலம் வர வேண்டும் என்பது எனது தெளிவு.
இத்தகைய சிறப்புமிக்க பள்ளிப் பருவத்திலே நம் எதிர்கால வாழ்விற்கு தேவையான சிந்தனைகளை வளர்த்து மற்றவர்களுக்கு எவ்வாறு எல்லாம் ஒளி தர முடியும் எனவும், மேலும், நம் பள்ளியின் பெருமையை உயர்த்த முடியும் என்ற எண்ணத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
பள்ளியும் நானும் என் கருத்தில் மேலோங்கி உயர்ந்த இடத்தில் உள்ள என் பாசமான மாணவர்களே சற்று யோசிங்கள். பள்ளியும் நாமும் சேர்ந்து இருக்கும் இந்த அற்புதமான நாட்கள் மிகவும் பெருமை வாய்ந்தது. இக்காலக் கட்டத்தில் என்னால் என் பள்ளியை எவ்வாறு எல்லாம் பெருமை அடைய செய்யமுடியும். அதற்காக நான் என்னென்ன காரியங்கள் செய்ய வேண்டும்.
எவ்வாறெல்லாம் நடந்து கொள்ள வேண்டும் என்பதை பற்றி ஒவ்வொரு மாணவனும் சிந்தித்து செயல்பட முன்வர வேண்டும். மாணவர்களே ரெடியா? என்ன ரெடியா? உடனே உங்கள் கையை உயர்த்தி கட்டை விரலை உயர்த்துங்கள் பார்ப்போம். நான் செய்ய முடிவெடுக்கும் செயல்படும் ஒவ்வொரு செயலும் நம் பள்ளியின் வளர்ச்சி குறித்த சிந்தனையாக இருக்க வேண்டும்.
உதாரணமாகப் போட்டித் தேர்வில் வெற்றி பெற்று நம் பள்ளியின் பெயரை வெளிக்கொணர்தல், தொலைக்காட்சி மற்றும் செய்தித்தாள் போன்ற ஊடகங்களின் நடைபெறும் போட்டிகளில் பங்கேற்று தனித் திறமைகளை வெளிப்படுத்தி நாம் யார் என்பதையும் நம் பள்ளியின் பெருமை என்ன என்பதையும் மற்றவர்களுக்கு காட்ட வேண்டும்.
பள்ளி என்பது வெறும் கட்டிடம் மட்டுமல்ல நம்முடன் பயணித்து நம்மை வாழ்வில் உயர்ந்த இடத்தில்உயர்த்தி வைக்க ஒவ்வொரு நொடியும் நம்மை மட்டுமே சிந்தித்து தன் வாழ்வைக் கரைத்துக் கொண்டிருக்கும் பெரு மதிப்பிற்குரிய நம் ஆசிரியர்களையும் அவர்களுக்கு உதவும் நம் பள்ளி அலுவலக நண்பர்கள் மற்றும் தூய எண்ணம் உள்ள நம் உயிர் சக தோழர்களையும் உள்ளடக்கிய ஒரு பெரிய பட்டியலே அதனுள் இருக்கிறது.
தற்சமயம் உன் பள்ளியின் முன்னாள் மாணவர்களும் பள்ளிக்கு வந்து நமக்கு உதவும் நல்ல தருணங்களை நினைப்பதுடன் அவர்களைப் போலவே இப்பள்ளியில் படித்து ஓர் உயர்ந்த இடத்தில் பிரகாசிக்க வேண்டும்.
பள்ளியின் பெருமையை நிலை நாட்ட வழிகாட்டுக் கூட்டம் நடைபெறும் போது தேவையான சந்தேகங் களைத் தெளிவுபடுத்திக் கொள்ள வேண்டும். இவை எல்லாவற்றிற்கும் மேலாக நம் தாய் தந்தையின் எண்ணங்களைப் பூர்த்தி செய்ய வேண்டும். இப்பொழுது நம்மிடம் உள்ள ஒவ்வொரு மணித் துளியும் உன் வாழ்வில் மென்மையான மற்றும் மேன்மையான உன் உயிர் துளி என்பதை மறக்காமல் பள்ளியின் வழிகாட்டுதல் மற்றும் உதவிகளைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
உங்களால் மட்டுமே உங்கள் பள்ளி பெருமை அடையும் அந்த பெருமை உங்கள் கையிலே உள்ளது என்பதை நினைவில் கொண்டு தினமும் தங்களின் தகுதியை வளர்த்து, வளர்ந்து எழுங்கள். உங்கள் வெற்றிக்குள் பள்ளியின் வெற்றியும் பள்ளியின் வெற்றிக்குள் எதிர்கால மாணவர்களின் வெற்றியும் அடங்கியிருக்கிறது.
- கட்டுரையாளர் ஆசிரியை கணிதத்துறைஎஸ்.ஆர்.வி.சீனியர் செகண்டரி பப்ளிக் பள்ளி, திருச்சி.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT