Published : 19 Oct 2023 04:30 AM
Last Updated : 19 Oct 2023 04:30 AM
மதுரை வாசியான நான் ஒரு நாள் ஆரப்பாளையம் பேருந்து நிலையம் செல்லும்போது மண்பாண்ட கடைகளை பார்த்துக்கொண்டே சென்றேன். விதவிதமான சமையல் கலன்கள் இருப்பதைக் கண்டவுடன் விழைந்த கட்டுரை இது.
60 அல்லது 70 ஆண்டுகளுக்கு முன்பு நமது முன்னோர்கள் பயன் படுத்திய உணவுக் கலன்களுக்கும், அவர்கள் சமைப்பதற்கு பயன்படுத்திய அடுப்புகளுக்கும், அவர்கள் சமைத்து தந்த உணவு பதார்த்தங்களுக்கும் இப்போது நாம் பயன்படுத்தும் அடுப்புகள் உணவுக் கலன்கள் மற்றும் உண்ணும் கலாச்சாரத்திற்கும் ஏணி வைத்தாலும் எட்டாத தூரத்தில் இருக்கிறோம்.
நாகரீகம் என்ற பெயரிலும் வேலையை எளிமையாக, சுலபமாக, வேகமாக முடிக்க வேண்டிய அவசர யுகத்திலும் இருக்கிறோம். எனவே, நமது முன்னோர்களின் சமையல் முறையை முழுமையாக தொடர்ந்திட முடியாவிட்டாலும் உணவினை நஞ்சாக்கிடும் உணவுக்கலன் பற்றியாவது தெரிந்து கொள்ள வேண்டும்.
ஆய்வறிக்கையில் அதிர்ச்சி தகவல்: அமெரிக்க சுற்றுச்சூழல் பணிக்குழுவின் ஆய்வறிக்கையில் இருந்துஒரு சில தகவல்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். இன்றைய கால பெண்களின் தேர்வாக உள்ள ஒருவகை உணவுக்கலன் “ஒட்டவே ஒட்டாது” என்ற நான்ஸ்டிக் பாத்திரங்கள்தான்.
அதிகம் வழுக்கும்பூச்சு என்று கின்னஸ் சாதனை படைத்த ‘டெஃப்லான்’ (Teflon) பசை தடவிய இந்த பாத்திரங்களை பிசிர்கள் இன்றி எளிதில் சுத்தம் செய்யலாம். கொலஸ்ட்ரால் மனிதர்களுக்காக இதில் எண்ணெய் இல்லாமல் எதனையும் பொறிக்கலாம் என்பதுபோன்ற வசீகரமான விளம்பரங்களினால் சமையலறையில் அதிகம் செல்வாக்கு பெற்றிருக்கும் ‘டெஃப்லான்’ பாத்திரங்களே அதிகம்ஆபத்தானவை என்று எச்சரிக்கப்பட்டு உள்ளது.
சமையலறையில் தீய்ந்து கொண்டிருக்கும் டெஃப்லானின் வேதியயற் பெயர் பாலி டெட்ரா புளோரோ எத்தலின், டெஃப்லான் குறித்த ஆய்வுகளை வாஷிங்டனில் இயங்கி வரும் சுற்றுச்சூழல் பணிக்குழு மேற் கொண்டு வருகிறது. கடந்த 50 ஆண்டுகளில் 1949-ல் உலகிற்கு அறிமுகம் செய்யப்பட்ட ‘டெஃப்லான்’ பற்றி கிடைத்திருக்கக்கூடிய ஆதாரங்களின் அடிப்படையில் தனது ஆய்வுகளின் அறிக்கைகளை வெளியிட்டுள்ளது.
‘டெஃப்லான்’ பூசப்பட்ட பாத்திரங்கள் சூடேறத் தொடங்கியதும் டெஃப்லானில் இருந்து முதலில்நுண்ணியதிலும் அதி நுண்ணியதான துகள்கள் மேற்கிளம்புகின்றன. இவை பத்து நிமிடத்திலேயே சோதனை எலிகளில் நுரையீரல் களை நச்சுப்படுத்துவது நிரூபணமாகி யுள்ளது.
‘டெஃப்லான்’ மேலும் சூடேற சூடேற வெவ்வேறு வகையான உயிர்கறுக்கும் வாயுக்களாக உருவெடுக்கிறது. கார்போனைல் ஃபுளோரைட்டு என்னும் வாயு காது, மூக்கு, கண் என்று புலன் உறுப்புகளில் எரிச்சலை உண்டு பண்ணுவதுடன் நுரையீரல் பைகளை நீர்கோர்க்க வைத்து மூச்சுத் திணற வைக்கிறது.
மோனோ ஃப்ளோரோ அசிடேட் வாந்தி, மயக்கம், பார்வை மங்குதல் என்று ஆரம்பித்து கடைசியில் இதயத்தையும் சுவாசப் பைகளையும் சீராக இயங்கவிடாமல் தள்ளாட வைக்கிறது. இவை மட்டுமல்ல, ரெப்லான் விடுவிக்கும் பெர்க்ளோரா ஒக்ரோ னோயிக் கமிலம், டெட்ரா ப்ளோரோ எத்திலின் என்னும் இரண்டு வேதிகளும் புற்றுநோய் தூண்டிகள்.
மேலும் உயர் சூட்டில் ‘டெஃப்லான்’ பாத்திரங்கள் உருவாக்கும் பெர்ஃப் ளோரோ பியூட்டன் கார்பன் டெட்ராஃபுளோரைடு போன்ற வாயுக்கள் வளிமண்டலத்தில் நீண்டகாலம் தங்கியிருந்து பூமியை சூடுபடுத்தக் கூடியன. மின்னடுப்பில் டெஃப்லான் கலன்கள் ஐந்து நிமிடங்களில் 382.7 டிகிரி செல்சியஸ் வெப்ப அளவை அடைவதையும், 240 டிகிரிசெல்சியஸ் அளவிலேயே நச்சுத்துகள்கள் வெளியேறத் தொடங்கிய தையும் சோதனை ரீதியாக பதிவு செய்துள்ளது.
“உணவை நஞ்சாக்கும் கலனை விடுத்து
விட்டுப்போன உறவான
மண் கலன் பற்றியும் சிந்தித்திடுவோம்”
- கட்டுரையாளர் தலைமை ஆசிரியர் பல்லோட்டி மேல்நிலைப்பள்ளி நாகமலை, மதுரை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT