Last Updated : 28 Jul, 2023 04:20 AM

 

Published : 28 Jul 2023 04:20 AM
Last Updated : 28 Jul 2023 04:20 AM

சுதந்திர சுடர்கள்: ஆகஸ்ட் 15, 1947 | நடந்தது என்ன?

200 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்த ஆங்கிலேயர்களின் ஆட்சியில் அனைத்து உரிமைகளையும் இழந்து, பல கொடிய சித்ரவதைகளை இந்தியர்கள் அனுபவித்துவந்தனர். இந்தியர்களின் வாழ்வில் ஆகஸ்ட் 15, 1947இல் சுதந்திர ஒளி படர்ந்தது. அந்த நாளில் நடந்த சில முக்கிய நிகழ்வுகள்:

* ஆகஸ்ட் 15, 1947 அன்று, தில்லியின் சாலைகளில் மக்கள் பெரும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். நகரெங்கும் மூவண்ணக் கொடிகள் பெருமிதத்துடன் பறந்தன.

* அதே நாளில், ஜவாஹர்லால் நேரு இந்தியாவின் முதல் பிரதமரானார்.

* பதவியேற்பு விழா வைஸ்ரீகல் லாட்ஜில் நடைபெற்றது.

* சுதந்திர இந்தியாவுக்கு விசுவாசமாக இருப்பதற்கான உறுதிமொழியை எடுக்குமாறு அரசமைப்பு அவை உறுப்பினர்களிடம் இந்தச் சந்தர்ப்பத்தில் ஜவாஹர்லால் நேரு கேட்டுக் கொண்டார்.

* சுதந்திர இந்தியாவின் தேசியக் கொடி கவுன்சில் இல்லத்தின் (தற்போதைய நாடாளுமன்ற கட்டிடம்) மேல் ஏற்றப்பட்டது.

* இந்திய நாடாளுமன்றத்தில் தனது முதல் உரையை ஜவாஹர்லால் நேரு நிகழ்த்தி னார்.

* அப்போது சீனா, அமெரிக்கா, நெதர்லாந்து ஆகிய நாடுகளின் பிரதிநிதிகள் இருந்தனர்.

* ஜவாஹர்லால் நேரு தனது முதல்நாடாளுமன்ற உரையில், “துரதிர்ஷ்ட வசமான ஒரு காலகட்டத்துக்கு நாம் இன்று முடிவுரை எழுதிவிட்டோம். இந்தியாமீண்டும் தன்னைக் கண்டுபிடித்துக் கொள்ளும்” என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x