Published : 03 Jul 2023 04:14 AM
Last Updated : 03 Jul 2023 04:14 AM
உலகை எவ்வாறு மாற்றலாம்? இது பெரியவர்களே பதில் சொல்ல நிறைய யோசிக்க வேண்டிய கேள்வி. குழந்தைகளால் என்ன செய்ய முடியும்? என்ற கேள்வி நமக்குள் எழலாம். குழந்தைகள் நேரடியாக யோசிப்பவர்கள். என்ன செய்யலாம் என்று யோசிப்பார்கள். அறிவுத்தடை இல்லாத சிந்தனை. கடினமான சிக்கல்களுக்கு எளிய மனங்களில் புதிய வழிகள் பிறக்கும்.
ஆசிரியர் சொன்ன செயல்பாட்டிற்காக என்ன செய்யலாம் என்று யோசித்தபடியே பள்ளி முடிந்த பிறகு வீட்டுக்குத் திரும்பும் வழியில் வீடற்றவர்கள் வசிக்கும் பகுதிக்குச் செல்கிறான் டிரோவர். அங்கு கூடாரங்களில் ஏராளமானோர் வசிக்கின்றனர். பசியால் அவசர அவசரமாகச் சாப்பிட முயலும் ஒர் இளைஞரைத் தனது வீட்டுக்கு அழைத்து வருகிறான். அவருக்கு உணவளித்து வீட்டிலேயே தங்க வைக்கிறான். அவனது அம்மா வேலைக்குச் சென்று இரவு தாமதமாக திரும்புகிறார். காலையில் புதிய மனிதர் ஒருவர் வீட்டில் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைகிறார். காரணத்தை அறிந்ததும் கோபம் கொள்கிறார். அவரைக் கண்டித்து வீட்டிலிருந்து வெளியே அனுப்புகிறார். முன்பின் தெரியாதவர்களை வீட்டிற்குள் அனுமதிக்கக்கூடாது என டிரோவரைக் கண்டிக்கிறார். இது ஆசிரியர் கொடுத்த செயல்பாடு என்று அவன் சொன்னதும் அம்மாவின் கோபம் அதிகமாகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT