Published : 19 Jun 2023 05:31 AM
Last Updated : 19 Jun 2023 05:31 AM

வாழுங்கள், வாழவிடுங்கள்!

இயற்கையால் நாம் வாழ்கிறோம். நமக்கு வளம் தரும் இயற்கையை நாம் வாழ விடுகிறோமா?

பண்டைய காலத்தில் இயற்கையை அழிக்காமல், தானும் வாழ்ந்து வனத்தையும் செழிப்பாக வைத்திருந்தான் மனிதன். ஆனால்இன்றோ தன்னுடைய சுயநலத்திற்காக காடுகளையும், காட்டுயிர்களையும் அழித்துவிட்டு, அழிந்துவரும் உயிரினங்கள் என்று பெரிய பட்டியலிட்டுக் கொண்டிருக்கிறது மனித இனம். இன்று அறிவியல் வளர்ச்சி, நவீனத் தொழில்நுட்பங்கள் இருந்தும் மனித இனம் காடுகளை அழித்து வீடுகளையும், பெருநிறுவனங்களையும் கட்டிவிட்டு அதையே வளர்ச்சி என்கிறது.

இந்நிலையில் 1887-ல் ஆங்கிலேய அரசால் காட்டுப் பறவைகள் சட்டம், 1912-ல் காட்டுப் பறவைகள் மற்றும் விலங்குகள் பாதுகாப்பு சட்டம் கொண்டுவரப்பட்டது. இதில் காட்டுப் பறவைகள் மற்றும்விலங்குகள் பாதுகாப்பு சட்டம் 1935-ல் திருத்தப்பட்டது. ஆனாலும்வளர்ப்பு பிராணிகளின் பாதுகாப்புக்கு மட்டுமே இந்த சட்டத்தில் இடமளிக்கப்பட்டது. காட்டுயிர்கள் குறித்த அக்கறை அப்போது வெளிப்படவில்லை.

1960-ல் தான் வனவிலங்குகளின் பாதுகாப்பு மற்றும் சில உயிரினங்கள் அழிந்துவிடாமல் தடுக்க வேண்டும் என்ற விழிப்புணர்வு உண்டானது.

வனவிலங்குகள் w‘காடுகளின்' ஒரு பகுதி என்பதால் வனவிலங்குபாதுகாப்பு சட்டம் அவசியம் என்று இந்திய அரசு முடிவு செய்தது. இதையடுத்து, 1972-ல்நாடாளுமன்றத்தில் காடுகள்,காட்டுயிர்களின் அழிவைத்தடுப்பதற்காக வனவிலங்குகள் பாதுகாப்பு சட்டம் நிறைவேற்றப்பட்டது. இருந்தாலும் வனவளமும், விலங்குகளும் முழுமையாக பாதுகாக்கப்படவில்லை.

சுற்றுச்சூழலைப் பாதுகாத்து மேம்படுத்த வேண்டும் என்று இந்திய அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 48A கூறுகிறது. காடுகள், ஏரிகள், ஆறுகள், வனவிலங்குகள் உள்ளிட்ட இயற்கைச் சூழலை மேம்படுத்திப் பாதுகாக்க வேண்டியது மக்களின் கடமை என்று இந்திய அரசியலமைப்பு சட்டப்பிரிவு 51 A வலியுறுத்துகிறது.

மனிதன் இன்றி இயற்கை நீடித்திருக்கும், ஆனால் இயற்கை இன்றி மனிதன் ஒரு முறை கூட மூச்சுக் காற்றை சுவாசிக்க முடியாது. கானகத்தை அழிப்பதும், வனங்களை ஒழிப்பதும் நமக்கு நாமே நஞ்சூட்டிக் கொள்வதற்குச் சமம் என்பதை உணர்வோம்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x