Published : 30 Jan 2023 06:22 AM
Last Updated : 30 Jan 2023 06:22 AM
எண்களின் வரலாறு மிகவும் சுவாரஸ்யமானது. மனிதன் எப்படி எண்களைக் குறிப்பிட ஆரம்பித்தான், எப்படி தற்சமயம் இந்த 0-9 எண்களைப் பயன்படுத்துகின்றோம் என்பது பல ஆச்சர்யங்கள் நிறைந்தது. இன்று மிக எளிதாக தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகின்றோம், ஆதிமனிதனுக்கு எப்படி எண்களின் தேவை வந்திருக்கும்? படிப்படியாக எப்படி அதனைக் குறிப்பிட்டான். கணிதம் உருவாக அதுவே காரணமாக அமைந்தது.
கணித வரலாறுகளைத் தனியாக நாம் பார்க்க இயலாது. அது அந்த காலகட்டத்தில் அரசியல் மற்றும் பொருளாதாரத்துடன் எப்போதும் தொடர்புடையது. அறிவியலும் அப்படியே. ரோமானியர்கள் உலகம் முழுக்க காலூன்ற ஆரம்பித்த காலகட்டத்தில் ரோமானிய எண்கள் எல்லா இடங்களிலும் பரவியது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT