Published : 02 Nov 2022 06:15 AM
Last Updated : 02 Nov 2022 06:15 AM
சாந்தகுமாரும் அமுதாவும் கோடை விடுமுறைக்கு வானவன் மாமா கிராமத்துக்கு சென்று இருந்தனர். மாமா இயற்கை விவசாயி. வழக்கமாக சென்னையில் இருக்கும் பொழுது விடுமுறை என்றால் ஒன்பது மணிக்கு நிதானமாக எழுந்திருப்பவர்கள் இப்போது மாமாவுடன் விடியற்காலையிலேயே வயலுக்கு வந்து விட்டார்கள். பச்சை பசேல்னு வயல் எவ்ளோ அழகா இருக்கு மாமா என்ற அமுதா தன் காலுக்கு அருகில் ஊர்ந்து செல்லும் பாம்பை பார்த்ததும் ஐயோ! பாம்பு என்று அலறிக் கொண்டு ஓடினாள். சாந்தகுமார் பக்கத்தில் இருந்த கட்டையை எடுத்து பாம்பை அடிக்க முற்பட்டான். மாமா அவனை தடுத்து, அடிக்காத விடுடா அதை என்றார்.
இதுக்கு எதுக்கு பாம்பு? - மாமா நம்மள கொத்திட்டா என்ன செய்யறது? அது விஷம் இல்லாத பாம்புடா, உலகத்துல 80 சதவீத பாம்புகள் விஷம் இல்லாததுதான். நாம அதை தொல்லை பண்ணாத வரைக்கும் அதுவும் நமக்கு எந்த தொல்லையும் கொடுக்காது. வயல்ல விவசாயிகளுக்கு பெரிய பிரச்சினையா இருக்கும் எலிகளை பிடிக்க பாம்புகள் ரொம்ப உதவும். ஏன் மாமா எலிய கொல்ல மருந்து கடைகளில் கெமிக்கல் பிஸ்கட் கிடைக்குதே; இதுக்கு எதுக்கு பாம்பு? குமார் நீ சொல்ற மாதிரி ரசாயனங்களை பயன்படுத்தி எலிகளைக் கொன்னா அதை சாப்பிடும் பாம்புகளும் பாம்புகளை சாப்பிடும் கழுகுகளும் இறந்து போகும். நிலமும் பாழாகும். ஏற்கெனவே ரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்தி நிலங்கள் வளம் குறைஞ்சி மலடா போயிருச்சு. உரங்களும் பூச்சிக்கொல்லிகளும் போட்டாதானே மாமா பயிர் நல்லா வளரும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT