Published : 28 Sep 2022 06:12 AM
Last Updated : 28 Sep 2022 06:12 AM
நகர நெரிசலில் கான்கிரீட் கோபுரங்களில் குளிர்பதனச் சிறைகளில் அரைத்த மாவையே அரைப்பதில் உங்களுக்கு விருப்பம் இல்லையா? இயற்கையின் நுரையீரல்களான மாசுபடாத காடுகளில் உங்களுக்கு வேலை செய்ய வாய்ப்பு கிடைத்தால் எப்படி இருக்கும்? அடர்ந்த காட்டிலும் அது தொடர்பான ஆய்வுக்கூடங்களிலும் ஆராய்ச்சி செய்வது சாகசமானது கூடவே சுவாரசியமுமானது.
இந்திய வனவியல் ஆராய்ச்சி மற்றும் கல்விக் கழகம், தேசிய அளவில் காடுகள் சார்ந்த ஆராய்ச்சி, கல்வி மற்றும் விரிவாக்க முயற்சிகளை ஒருங்கிணைக்கிறது. 1876-ல் டேராடூனில் தொடங்கப்பட்ட வனப்பள்ளி (Forest School) தான் இந்தியாவில் வன அறிவியல் துறைக்கான தொடக்கப்புள்ளி. இதன் வளர்ச்சியாக 1986-ல், இந்திய வனவியல் ஆராய்ச்சி மற்றும் கல்விக் கழகம் (Indian Council of Forestry Research and Education – ICFRE) ஆரம்பிக்கப்பட்டது. சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்றம் என்ற அமைச்சகத்தின் கீழ் தன்னாட்சி பெற்ற அமைப்பாக இயங்கிவருகிறது இந்திய வனவியல் ஆராய்ச்சி மற்றும் கல்விக் கழகம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT