Last Updated : 27 Sep, 2022 06:16 AM

 

Published : 27 Sep 2022 06:16 AM
Last Updated : 27 Sep 2022 06:16 AM

ப்ரீமியம்
சின்னச் சின்ன மாற்றங்கள்-12: ரகசிய நோட்டு

ஒவ்வொரு வயதிலும் நமக்கு ஏராளமான கேள்விகள் எழும். அதில் பெரிய சிக்கலே நம்மை கேள்வியே கேட்க விடமாட்டார்கள். “ஆமா ரொம்ப தெரியுமா?” “வயசுக்கு ஏத்தமாதிரி பேசு” என அடக்கிவிடுவார்கள். இப்போது வளரிளம் பருவத்தை எட்டிவிட்டோம். இப்போதும் நமக்கு நிறைய கேள்விகள் இருக்கும். முன்பைவிட இன்னும் நிறைய கேள்விகள் இருக்கும். அது சில சமயம் குழப்பங்களாகவும் இருக்கும். சின்ன வயதில் எழுந்த கேள்விகள் எல்லாம் இப்போது நினைத்தால் சிரிப்பாக இருக்கும். இப்போது எழும் கேள்விகளையும் அப்படி ஒரு நாள் கடப்பீர்கள்.

முடிந்தால் ஒரு புதிய நோட்டினை அல்லது பழைய நோட்டினை எடுத்துக்கொள்ளுங்கள். இன்றைய தேதி போட்டு, மனதில் இருக்கும் கேள்விளை எல்லாம் எழுதுங்கள். அந்த கேள்விகள் அனைத்தைப் பற்றியும் இருக்கலாம். பள்ளி, ஆசிரியர்கள், அப்பா, அம்மா, உறவினர், பிடித்த நண்பன், பிடித்த ஆசிரியர், அறிவியல், வரலாறு, ஊர், உணவு என உங்களுக்குள் இருக்கும் எல்லா கேள்விகளையும் எழுதுங்கள். குளிர்காலத்தில் வண்டியை ஸ்டார்ட் செய்வதுபோல் ஸ்டார்ட்டிங் ட்ரபிள் இருக்கும். ஆனால் கொஞ்சம் நேரம் ஒதுக்கி இந்த கேள்விகளை எழுத ஆரம்பியுங்கள். கொஞ்ச நேரத்தில் மடைதிறந்த வெள்ளமாக சடசடவென கொட்டும். மீண்டும் ஒரு வறட்சி நிலவும். எல்லா கேள்விகளும் தீர்ந்துபோகும். அந்த நோட்டினை மூடி வைத்துவிடுங்கள்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x