Last Updated : 19 Sep, 2022 06:15 AM

 

Published : 19 Sep 2022 06:15 AM
Last Updated : 19 Sep 2022 06:15 AM

ப்ரீமியம்
ஆயிரம் ஜன்னல் வகுப்பறை 09: மாணவர்கள் ஆர்வத்துடன் கவனிக்க என்ன செய்ய வேண்டும்?

வாசிப்பு குறித்த எண்ணங்கள் கிளைவிட்டுப் படர தொடங்கின. வகுப்பறைகளுக்குள் சடங்குகளாக ஆக்கப்பட்டவை அனைத்துமே அதிக நேரம் மீண்டும் மீண்டும் செய்யப்படுகின்றன. மாணவர்களின் மனதைச் சிறிதும் தொடாமல் நேரத்தை கடத்தும் பயிற்சிகளாகவே அவை இருக்கின்றன. வாசிப்பது, வாசித்ததைப் புரிந்து கொள்வது, கேட்பது, கேட்டதை புரிந்து கொள்வது, அதை தனது சொந்த நடையில் எழுதுவது ஆகியவற்றில் மகிழ்ச்சியாக, செயல்பாடுகளாகப் பயிற்சி செய்வதே மொழித் திறன்களில் குழந்தைகளை மேம்படச் செய்யும்.

அடுத்த பாட வேளையில் ஏற்கனவே வாசித்த சிறுகதையை நான் வாசிக்கத் தொடங்கினேன். குரல் ஏற்ற இறக்கத்துடன் நிறுத்த வேண்டிய இடங்களில் நிறுத்தி உணர்வு கலந்து வாசித்து முடித்தேன். இப்போது இந்தக் கதையை யாரால் சொல்ல முடியும் என்று கேட்டேன். ஓரிருகரங்கள் உயர்ந்தன. கதையைச் சொன்னார்கள். இந்தக் கதையை ஏன் உங்களிடம் வாசித்துக்காட்ட விரும்பினேன் தெரியுமா? டேவிட் என்று எனக்கொரு நண்பர் இருக்கிறார், மீனவர். தூத்துக்குடி கடற்கரையில் மீன் விற்பனை நிலையத்தில் வேலை செய்கிறார். அவருக்கு குடும்பம் இல்லை. கடற்கரைக்கு வேலைக்கு வரும் சிறுவர் சிறுமியரைப் பார்த்தாலே அவருக்கு மனம்பதறும். அவர்களோடு பேசி ஏன் படிக்கவில்லை என்பதை அறிந்து மீண்டும் பள்ளியில் சேர்ப்பதற்கான முயற்சிகளைச் செய்வார். அவரிடம் செல்பேசி இல்லை. யாரிடமாவது செல்லை வாங்கி என்னோடு பேசுவார். அருகிலிருக்கும் சிறுவரிடம் படிப்பு அவசியம் என்று பேசுங்க சார் என்று என்னையும் பேச வைப்பார். அம்மா இறந்த பிறகு தொடர்ந்து படிக்க முடியாமல் பதினாறு வயதில் கடலுக்கு வந்தவர். கல்வி மட்டுமே வாழ்க்கைக்கு மரியாதையான உயர்வைத் தரும் என்று சொல்லுவார். மதுரைக்கு வரும் போது நமது பள்ளிக்கும் வருவார். அப்போது வகுப்புக்கு அழைத்து வருகிறேன். அனுபவமிக்க அவர் பேச்சைக்கேட்பது நம்பிக்கையாக இருக்கும் என்றேன்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x