Published : 11 Feb 2020 11:11 AM
Last Updated : 11 Feb 2020 11:11 AM
வெங்கி
போட்டோஷாப் மெனுவில் அடுத்ததாக நாம் பார்க்கப் போவது எடிட்டில் Purge ஆகும். பொதுவாக போட்டோஷாப்பில் நாம் செய்யும் செயல்கள் அனைத்தும் ஒரு மெமரியாக பதிவாகிக்கொண்டிருக்கும்.
நமக்குத் தேவைப்படும்போது அந்த மெமரியை நீக்க, அதாவது Undo செய்வது, கிளிப்பார்டு, ஹிஸ்டரி மற்றும் அனைத்து செயல்பாடுகளையும் கணினியின் ரேமில் உள்ள அனைத்து போட்டோஷாப் மெமரிகளையும் நீக்க, எடிட்டில் Purgeக்குச் சென்று மேற்கண்ட வற்றில் எது தேவை என்பதைத் தேர்ந்தெடுக்கவும். அல்லது அனைத்தையும் தேர்ந்தெடுக்கலாம். இப்போது அது உங்கள் ரேமில் இருந்து அனைத்தையும் அழித்து விடும்.
அடுத்து, Adobe PDF presets...
Portable Document Format என்பது உலகளவில் தகவல்களை சேர்த்து, பாதுகாத்து வைக்கும் ஒரு கோப்பு வடிவமாகும், இது எழுத்துருக்கள், படங்கள் மற்றும் தளவமைப்புகளை பாதுகாக்கிறது. இதையே அடோப் PDF நமக்கு எளிமையாக கையாள உதவுகிறது. மேலும் மின்னணு ஆவணங்களின் நம்பகமான பரிமாற்றத்துக்கும் வழி வகுக்கிறது. அடோப் PDF கோப்புகள் சுருக்கமாகவும் முழுமையாகவும் உருவாக்கிக்கொள்ளக் கூடியதாகும்.
அடோப் PDF மூலம் நாம் நமக்குத் தேவையான கோப்புகளை யார் வேண்டுமானாலும், எங்கு வேண்டுமானாலும் ஓப்பன் செய்து பார்க்கும்படி உருவாக்க முடியும். அதற்குத் தேவையானது இலவச அடோப் ரீடர் மென்பொருள் ஆகும். மேலும் பிடிஎஃப் கோப்புகளாக மாற்றி வைக்கப்படும் File களின் சைஸ் மிகவும் குறைவாக இருக்கும். அதே நேரத்தில் அதன் குவாலிட்டி கொஞ்சமும் குறைய வாய்ப்பில்லை.
அதாவது போட்டோஷாப் File களில் எழுத்துருக்களின் பிக்ஸல்கள் அப்பட்டமாகத் தெரியும். ஆனால் அதையே பிடிஎஃப் ஆக மாற்றிக்கொண்டு அதனை ப்ரிண்ட் போட்டால், வெக்டர் இமேஜ் போல பிக்ஸல்கள் ஏதுமின்றி துள்ளியமான எழுத்துருக்களின் ப்ரிண்ட்டுகள் நமக்குக் கிடைக்கும். அடுத்ததாக Presets இது போட்டோஷாப் தூரிகைகள், வண்ணங்கள், வடிவங்கள், மற்றும் ஃபோட்
டோஷாப் உடன் வரும் முன்னமைக்கப்பட்ட கருவிகளை மாற்றியமைக்க நம்மை அனுமதிக்கிறது.
எடுத்துக்காட்டாக, நீங்கள் இப்போதுள்ள Presetகளின் தொகுப்பை மாற்ற அல்லது உங்கள் விருப்பம் போல் உருவாக்கிக்கொள்ளலாம். பொதுவாக, நீங்கள் முன்னமைவை மாற்றும்போது, மாற்றங்களை புதிய முன்னமைவாக சேமிக்க ஃபோட்டோஷாப் கேட்கும், இதனால் அசல் மற்றும் மாற்றப்பட்ட முன்னமைவு இரண்டுமே நமக்குக் கிடைக்கும்.
அடுத்து Remote Connections...
இந்த ரிமோட் இணைப்புகள் போட்டோஷாப்பில் உள்ள ஒரு சிறப்பு அமைப்பாகும். இது இயல்பாகவே ஓர் உறக்க நிலையில் உள்ளது. அதனை இயக்க அதற்கு ஒரு கடவுச்சொல்லை உருவாக்க வேண்டும்.அதன் மூலம் கடவுச்சொல் தெரிந்த எவரும் உங்கள் ஃபோட்டோஷாப்புடன் தொலைவிலிருந்து இணையமுடியும். போட்டோஷாப்பில் இணைக்க முடியவில்லை எனில், உங்கள் இயந்திரம் இயங்கும் போட்டோஷாப் மற்றும் மொபைல் சாதனம் ஒரே வைஃபை நெட்வொர்க்குடன் இணைக்கப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்துகொள்ளவும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT