Published : 04 Feb 2020 10:39 AM
Last Updated : 04 Feb 2020 10:39 AM
வெங்கி
போட்டோஷாப் மெனுவின் எடிட் பகுதியில் அடுத்ததாக நாம் பார்க்கப் போவது Define Brush Preset ஆகும். போட்டோஷாப்பில் உள்ள பிரஷ் உகந்ததாக இல்லாவிட்டால், நமது தேவைக்கேற்ற வகையில் ஒரு புதிய பிரஷ்ஷை நாமே உருவாக்கிக்கொள்ள இது உதவும்.
விதவிதமான வடிவங்கள்
அடுத்ததாக Define Pattern. இது ஒரே ஒருவடிவத்தைக் கொண்டு எண்ணிலடங்கா உருவங்களை பெருக்கிக்கொள்ள உதவக் கூடியதாகும். மேலும் டெக்ஸ்டைல்ஸில் டிசைன்கள் உருவாக்குவதற்கு மிகவும் உதவிகரமான ஓர் அம்சமாகும். ஒரு தரைவிரிப்பு இருக்கிறதென்று வைத்துக்கொள்வோம். அதை மெருகேற்ற மேலும் சில டிசைன்களை அதில்சேர்க்கவேண்டும். அதற்கு முதலில் நாம் ஒரே ஒரு டிசைனை தயார் செய்யவேண்டும்.
பிறகு அந்த டிசைனை செலக்ட் செய்துகொண்டு பிரஷ்ஷை உருவாக்கியது போலவே எடிட்டில்சென்று Define Pattern – ஐ க்ளிக் செய்தால் போதும். ஒரு புதிய பேட்டன் உருவாக்குவதற்கான பட்டி தோன்றும். அதில் நாம் உருவாக்கும் இந்த புதிய பேட்டனுக்கு நாமே ஒரு பெயரைச் சூட்டிவிட்டு OK வை க்ளிக் செய்தால் போதும். ஒரு புதிய பேட்டன் தயாராகிவிடும். அடுத்து, தரைவிரிப்பை செலக்ட் செய்துகொள்ள வேண்டும்.
தேவையென்றால் புதிதாக ஒரு லேயரை உருவாக்கி அதில் சென்ற பிறகு Paint Bucket Tool-ஐ எடுத்துகொள்ள வேண்டும். பிறகு பிரஷ் ஆப்ஷனில் சென்று Foreground என்று இருப்பதை Pattern ஆக மாற்றி வைத்துக்கொண்டு தரைவிரிப்பில் சென்று பெயிண்ட்டைக் கொட்டுவது போல் க்ளிக் செய்யவேண்டும்.
இப்போது தரை விரிப்பு உள்ள பகுதி முழுவது சென்று பேட்டன் டிசைனாக வந்து விழும். பர்ஸ்பெக்ட்டிவ் ஆக வரவேண்டுமென்றால் டிரான்ஸ்பார்ம் டூலை உபயோகித்துக்கொள்ளலாம். நிறத்தை சரி செய்யவேண்டுமென்றால் லேயர் மோடில் சென்றுதேவையான மாற்றத்தை செய்துகொள்ளலாம்.
அடுத்ததாக Define Custom Shape. இது ஒரு கஸ்டம் ஷேப்பை நாமே உருவாக்கிக் கொள்ள உதவுவதாகும். அதற்கு முதலில் ஒரு வடிவத்தை உருவாக்கிக்கொள்ள வேண்டும். பிறகு அதை முன்பு போல் செலக்ட் செய்தால் மட்டும் போதாது. அந்த வடிவத்தை மட்டும் செலக்ட் செய்த பிறகு மௌஸை ரைட்க்ளிக் செய்யவேண்டும். இப்போது தோன்றும்பட்டியில் நிறைய ஆப்ஷன்கள் வரும்.
அதில் Make Work Path என்று வரும். அதை க்ளிக் செய்தால், நாம் செலக்ட் செய்து வைத்ததில் ஒரு Pen Tool ஆல் உருவாக்கியது போல ஒருபாத் தோன்றும். இப்போது நாம் எடிட்டில் சென்று Define Custom Shape –ஐ க்ளிக்செய்யவேண்டும். ஒரு புதிய ஷேப் உருவாக்குவதற்கான பட்டி தோன்றும். அதில் நாம் உருவாக்கும் இந்த புதிய கஸ்டம் ஷேப்புக்கு நாமே ஒரு பெயரைச் சூட்டி OKவை க்ளிக் செய்தால் போதும். இப்போது ஒரு புதிய கஸ்டம் ஷேப் தயாராகிவிடும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT