Published : 28 Jan 2020 09:54 AM
Last Updated : 28 Jan 2020 09:54 AM

முகத்தை மாற்றும் மாயாஜாலம்

வெங்கி

போட்டோஷாப் மெனுவின் எடிட் பகுதியில் அடுத்ததாக நாம் பார்க்கப் போவது Puppet warp என்பதாகும். இதில் ஒரு படத்தில் தோன்றும் உருவத்தை மட்டும் வெட்டி எடுத்து நமக்குத் தேவையான அளவுக்கு வளைத்துக் கொள்ளலாம், மாற்றிக் கொள்ளலாம்.

போட்டோஷாப் மெனு Filter-ல் உள்ள Liquify போல நமக்கு உதவக்கூடிய இன்னொரு அம்சம் இது. அனிமேஷன் படங்களை உருவாக்கவும் இந்த Puppet warp மிகவும் உதவிகரமாக இருக்கும். அடுத்ததாக, Free Transform (Ctrl T) மற்றும் Transform.

ஒரு இமேஜையோ அல்லதுஅதில் குறிப்பிட்ட ஒரு பகுதியையோ, பொருளையோ தேவையான அளவுக்கு பெரிதாக்கவோ சிறிதாக ஆக்கவோ உதவக்கூடிய அம்சங்கள் இவை. இமேஜை செங்குத்தாகவோ அல்லது பக்கவாட்டிலோ புரட்டிப் போட்டுக்கொள்ளவும் இந்த அம்சம் உதவும். அத்தோடு தேவையான அளவுக்கு கடிகாரச் சுற்றிலோ அல்லது எதிர் கடிகாரச் சுற்றிலோ சுழற்றிக்கொள்ளவும் முடியும்.

அடுத்ததாக நாம் பார்க்கப் போவது, Auto-Align Layers ஆகும். இது பலஇமேஜ்களை ஒரே புள்ளியில் ஒருங்கிணைத்து அவற்றில் ஒரு படத்தை மேம்படுத்த உதவுவதாகும். உதாரணத்துக்கு, குரூப் போட்டோ எடுக்கப்படும்போது சிலர் கண் சிமிட்டிவிடுவார்கள்.

அனைவருமே கண்களைத் திறந்திருக்கும் படியாகத்தான் ஆல்பம் போட்டுக் கொடுக்க வேண்டும். அதனால்தான் புகைப்படம் எடுப்பவர் பிரிவியூவில் பார்த்துவிட்டு மறுமுறை அவர்களை போட்டோ எடுக்கிறார்.

இப்போது தேவை ஒரு புகைப்படம். அதை சிறப்பாக கொடுப்பதற்கு இரண்டு மூன்று புகைப்படங்கள் கூடுதலாகவே உள்ளன. ஆகையால் கூடுதலாக வைத்திருக்க கூடிய புகைப்படங்களில் இருந்து மாஸ்க் போட்டு, தேவையான பகுதியை மட்டும் ப்ரிண்ட் போடத் தேவையான புகைப்படத்தில் கொண்டுவந்து நிறுத்திவிடுவார்.

அடுத்ததாக, Auto-Blend Layers. இது RGB அல்லது கிரேஸ்கேல் இமேஜ்களில் மட்டுமே செயல்படுத்தக் கூடியது. மேலும் இமேஜ் அடுக்குகளில் மாஸ்க்குகளைப் பயன்படுத்தி குறிப்பிட்ட இமேஜை மேம்படுத்த உதவக் கூடியதாகும். உதாரணத்துக்கு, ஒருவருடைய முகத்தில் இன்னொருவருடைய முகத்தைக் கொண்டுவந்து அப்படியே பொருத்திக்கொள்ள முடியும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x