Published : 06 Jan 2020 11:21 AM
Last Updated : 06 Jan 2020 11:21 AM

கணித மேதைக்கு உதவிய இந்தியர்கள்

இரா.சிவராமன்

அன்றாடம் ஒரு வேளை மட்டுமே உணவருந்தும் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தாலும், கடின உழைப்பாலும், விடா முயற்சியாலும் பலரது உதவியாலும் கணிதத்தில் அரிய சாதனைகளை படைத்தவர் நிவாச ராமானுஜன். கணித உலகில் இந்தியாவின் பெயரை உச்சிக்குக் கொண்டு சென்றவர். அவருடைய பிறந்த தினமான டிசம்பர் 22-ம் தேதி தேசிய கணித தினமாக 2011-ம் ஆண்டு முதல் கொண்டாடப்பட்டு வருகிறது.

ராமானுஜனுக்கு இங்கிலாந்தில் இருந்த ஹார்டி, லிட்டில்வுட், நெவில் போன்ற பேராசிரியர்களே உதவி புரிந்தார்கள். இந்தியர்கள் அவரை கண்டுகொள்ளவில்லை என்ற கருத்து நிலவி வருகிறது. ஆனால், ராமானுஜனின் வாழ்வை நன்றாக படித்து பார்த்தால் அவருக்குப் பல இந்தியர்கள் தங்களால் முயன்ற உதவிகளையும், ஆலோசனைகளையும் வழங்கியது தெரிய வருகிறது. அப்படி கணித மேதை ராமானுஜனுக்கு உதவிய இந்தியர்களில் மிக முக்கிய பங்காற்றியவர்களை பற்றித் தெரிந்து கொள்வோமா!

அடையாளம் கண்ட ஆசான் சேஷூ

ராமானுஜன் சிறுவயதில் கும்பகோணத்தில் டவுன்உயர்நிலைப் பள்ளியில் பயின்றார். அப்போது அவருக்கு கணிதம் கற்பித்தவர் கணித ஆசிரியர் சேஷூ. ராமானுஜனின் கணிதத் திறனை முதன் முதலில் அடையாளம் கண்டவர் இவரே. பிற்காலத்தில் ராமானுஜன் சென்னையில் வேலை புரிந்த காலகட்டத்தில் சென்னை மாநிலக் கல்லூரியில் பேராசிரியராக பணிபுரிந்துகொண்டிருந்த சேஷூ தனது செல்வாக்கைப் பயன்படுத்தி ராமானுஜனைப் பல முக்கிய நபர்களுக்கு அறிமுகப்படுத்தினார். இது ராமானுஜன் இங்கிலாந்து செல்வதற்கு வழிவகுத்தது.

வேலையிலும் வீட்டிலும் உதவிய நாராயணன்

சென்னை துறைமுக அலுவலகத்தில் முதன்மை கணக்காளராக பணிபுரிந்தவர் நாராயணன். இவர் கணிதத்தில் முதுகலைப் பட்டம் பெற்றவர். இந்தியக் கணித கழகத்தில் முதலில் துணைச் செயலாளராகவும் பின்னர் பொருளாளராகவும் பணியாற்றினார். ராமானுஜனின் கணிதக் குறிப்புகளை ஓரளவிற்கு இவரால் புரிந்துகொள்ள முடிந்தது. ராமானுஜன் சென்னை துறைமுகத்தில் பதிவுரு எழுத்தர் பணிக்கு விண்ணப்பித்த போது அவருக்கு அந்த வேலையைப் பெற்றுதர முக்கிய காரணமாக இருந்தவர் நாராயணன்.

வேலை பெற்றுத் தந்ததோடு மட்டுமல்லாமல் ராமானுஜனுக்குத் தேவையானஅனைத்து அலுவலக ஆலோசனைகளையும் வழங்கினார். தினந்தோறும் வேலை முடிந்தவுடன் இரவில் நாராயணனின் இல்லத்தில் ராமானுஜன் கணித விவாதம் புரிவது வழக்கமாக இருந்தது. ராமானுஜனுக்கு உதவியது மட்டுமல்லாமல் அவர் மறைந்த பிறகும் அவருடைய குடும்பத்தினருக்கும் உதவினார் நாராயணன்.

இங்கிலாந்து அனுப்பிய ஆட்சியர் ராமச்சந்திரன்

நெல்லூர் மாவட்ட ஆட்சியராகராகவும் கணிதக் கழகத்தின் செயலாளராகவும் திகழ்ந்தவர் ராமச்சந்திரன். ராமானுஜன் வேலைத் தேடி தவித்த போது அவருக்கு ஒருவருடத்திற்கு பண உதவிபுரிந்து ஆய்வுகளை தொடர வழிவகுத்தார். ராமானுஜன் இங்கிலாந்திற்குச் சென்று ஆய்வு மேற்கொள்ளப் பல ஏற்பாடுகளை செய்தார். பல முக்கிய நபர்களுக்கு சிபாரிசு கடிதங்களை எழுதிக்கொடுத்து தன்னால் இயன்ற முயற்சிகளை மேற்கொண்டார்.

கணித கழகத்தை நிறுவிய ராமசுவாமி

திருக்கோவிலூரில் துணை மாவட்ட ஆட்சியராக பணிபுரிந்த ராமசுவாமி கணிதப் பாடத்தில் பட்டம் பெற்றவர். இந்தியாவில் கணிதத்திற்கென ஓர் அமைப்பை உருவாக்கி அதன் வளர்ச்சியை உலகிற்கு எடுத்துரைக்க எண்ணியதால் 1907-ல் இந்திய கணிதக் கழகத்தை (இன்றளவும் செயல்பட்டு வருகிறது) உருவாக்கினார். இதில் இளம் ஆய்வார்களுக்கென தனி இடமும், சுவாரஸ்யமான கணிதப் புதிர்களும் இடம்பெறும்.

ராமானுஜன் தனது நோட்டு புத்தகங்களை எடுத்துக்கொண்டு இவரை பார்க்க சென்றது பின்னாளில் வரலாறாக மாறியது. தான் நிறுவிய இந்திய கணிதக் கழகத்தின் பத்திரிகையில் ராமானுஜனின் புதிர்களையும் முதல் ஆய்வு கட்டுரையையும் வெளியிட்டு தமிழகம் மட்டுமே அறிந்திருந்த ராமானுஜனின் கணிதத்தை இந்தியா முழுவதும் தெரிந்துகொள்ள ராமசுவாமி உதவினார்.

அபூர்வ ஆற்றலைப் பாராட்டிய சிங்காரவேலு

சென்னை பச்சையப்பன் கல்லூரியின் கணிதத் துறை தலைவராக இருந்தவர்சிங்காரவேலு. ராமானுஜன் இரண்டாம் முறை எப்.ஏ., தேர்வு எழுத பச்சையப்பன் கல்லூரியில் சேர்ந்த போது அவருக்கு ஆசானாக விளங்கினார். ராமானுஜனின் திறமையை கண்ட சிங்காரவேலு ஒரு முறை அவரிடம் "உனது கணிதத் திறன் அபூர்வமானது.

இதை இங்கிருக்கும் நபர்களிடம் காண்பித்து எதிர்காலத்தை வீணடிக்காதே! இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் இருக்கும் உயரிய பேராசிரியர்களே உனது கணிதத்தைப் புரிந்து கொண்டு உதவ முடியும். எனவே, உடனடியாக அவர்களுக்கு இக்குறிப்புகளை அனுப்பி வெற்றி பெறுவாய்!" என அறிவுரை கூறினார். இந்த அறிவுரை இராமானுஜனின் வாழ்வில் மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது.

இவர்கள் மட்டுமின்றி அநேக இந்தியர்கள் ராமானுஜனுக்கு தங்களால் இயன்ற உதவிகளைப் புரிந்துள்ளனர். எனவே, ராமானுஜனுக்கு எந்த இந்தியரும் உதவவில்லை என்ற கூற்று மிகவும் தவறானது. எஸ். ஆர். ரங்கநாதன் (இந்திய நூலகத் தந்தை) எழுதிய 'Ramanujan, the Man and the Mathematician' மற்றும் பி.கே.நிவாசன் எழுதிய, ‘Memorial Volumes 1

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x