Published : 09 Dec 2019 11:26 AM
Last Updated : 09 Dec 2019 11:26 AM
இந்தியாவில் அநேகமாக எல்லா நதிகளுக்குமே ஏதேனும் ஒரு கதை சொல்லப்படுகிறது. அப்படியொரு கதையின் வழியாக ஒரு நதியைத் தெரிந்துகொள்ளத் தொடங்குவோமா!
ராமரும் சீதையும் நீண்ட தூரம் நடந்து சென்று கொண்டிருக்கும்போது சீதைக்கு தாகம் எடுத்ததாம். பக்கத்தில் எங்கும் தண்ணீர் கிடைப்பதாகத் தெரியவில்லை. சீதையின் தாகம் தீர்க்க, ராமர், ஓர் அம்பு விட அது விழுந்த இடத்தில் இருந்து, தண்ணீர் பீறிட்டு வந்ததாம். சீதையின் தாகமும் தணிந்ததாம்.
கிளை ஆறுகள் பலகர்நாடக மாநிலம், தீர்த்தஹள்ளி மாவட்டத்தில், அம்புதீர்த்தா (தீர்த்தா - தண்ணீர்) என்கிற இடத்தில் உற்பத்தி ஆகிறது ஷரவதி அல்லது சரவதி நதி. ‘ஷரா’ என்றால் அம்பு.
மேற்கு நோக்கிப் பாயும் இந்த நதி, மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் இருக்கிறது. சாகர், ஹொனோவர் ஆகியநகரங்கள் இதன் கரையில் இருக்கின்றன. நந்திகோல், ஹரித்ராவதி, மவினாகோல், யென்னகோல், ஹர்லிகோல்,நகோடிகோல் உள்ளிட்ட பல கிளை ஆறுகள் இந்த நதிக்கு இருக்கின்றன.
உத்தர கன்னடா மற்றும் ஷிமோகா மாவட்டங்களில், சரவதி ஆற்றுப்படுகைஅமைந்தள்ளது. மேற்குத் தொடர்ச்சிமலைப்பகுதியானது நல்ல மழைப்பொழிவு கொண்ட பகுதி. அகையால், சராவதி நதியில் ஆண்டு முழுதுமே தண்ணீர் வற்றாமல் ஓடுகிறது. மொத்தம் 128 கி.மீ., நீளம் பாய்ந்து, நிறைவாக ஹொனோவர் அருகே, அரபிக் கடலில் சங்கமித்துவிடுகிறது. கண்கவர் அருவிசரவதி ஆற்றங்கரை ஒட்டிய பகுதிகளில், ‘ப்ரி காம்ப்ரியன் பாறைகள்’ (Pre-Cambrian) மிகுந்துள்ளன. பூமியில் தோன்றிய மிகப் பழைமையான பாறை வடிவம் இது என்று கூறப்படுகிறது. 54 கோடி ஆண்டுகளுக்கும் முன்பு இருந்த காலகட்டம் ‘ப்ரி காம்பியன்’ எனப்படுகிறது. இந்த ஆற்றின் குறுக்கே‘லிங்கனமக்கி’ அணைக்கட்டு எழுப்பப்பட்டு இருக்கிறது. சரவதி ஆற்றின் ஒரு பகுதிதான் - 253மீ உயரம் கொண்ட,‘ஜோக் அருவி’ (Jog Falls) (கன்னடத்தில், ‘ஜோக்’ என்றால், அருவி!)வடக்கு கன்னட மாவட்டமான, சித்தாபூரா எனும் இடத்தில் உள்ளது. இந்தியாவின் இரண்டாவது உயரமான அருவி இது. (முதலாவது - நோகலிகை அருவி (மேகாலயா) - 335 மீ) பயணிகளை அதிகம்ஈர்க்கும் அருவிகளில், உலகின் 13வது இடம் இதற்கு. ’ராஜா’, ‘ரோரர்’, ‘ராக்கெட்’
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT