Published : 12 Feb 2024 04:25 AM
Last Updated : 12 Feb 2024 04:25 AM
முகம் பார்க்கும் கண்ணாடி மட்டும் நம் உருவத்தை எப்படிப் பிரதிபலிக்கிறது, டிங்கு? - ஜி. இனியா, 4-ம் வகுப்பு, தி விஜய் மில்லினியம் மேல்நிலைப் பள்ளி, கிருஷ்ணகிரி.
எல்லாப் பொருட்களிலும் மூலக்கூறுகள் இருக்கின்றன. ஒரு பொருளின் மீது ஒளி விழும்போது, அதன் அலைநீளத்தைப் பொருத்து வினைகள் உருவாகின்றன. ஒரு பொருளில் உள்ள நுண்ணிய துகள்களில் அதிகமான அலைவு வீச்சு இருந்தால், அந்தப் பொருள் ஒளியை உள்வாங்கிக் கொள்ளும். இதை ஒளி ஊடுருவா பொருள் என்கிறார்கள்.
ஒரு பொருளின் நுண்ணிய துகள்களில் குறைவான அலைவு வீச்சு ஏற்பட்டால், அப்போது மூலக்கூறுகள் அடுத்தடுத்த துகள்களுக்கு அதிர்வைக் கடத்தி ஒரு முனையிலிருந்து மறுமுனைக்குச் சென்றுவிடும். இதை ஒளிபுகும் பொருள் என்கிறார்கள்.
ஒரு பொருளின் மேற்புறத் துகள்கள் மட்டும் ஒளியின் தூண்டுதலால், பொருளின் உள்நோக்கிச் செல்லாமல், வந்த திசையிலேயே வெளிப்படும். இதைத்தான் பிரதிபலிப்பு என்கிறார்கள். கண்ணாடி ஒளியைக் கடத்தும். கண்ணாடியின் ஒரு பக்கத்தில் அலுமினியம், வெள்ளிப் பூச்சு போன்றவற்றைப் பூசும்போது கண்ணாடியின் உள்ளே ஊடுருவும் ஒளி, இந்தப் பூச்சில் பட்டு பிரதிபலிக்கும். இப்படித்தான் நம் உருவம் கண்ணாடியில் தெரிகிறது, இனியா.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT