Published : 06 Nov 2019 11:18 AM
Last Updated : 06 Nov 2019 11:18 AM
திருச்சி
தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் 27-வது தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டையொட்டி, திருச்சி மாவட்ட தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு திருச்சி எஸ்பிஐஓஏ சிபிஎஸ்இ பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
தூய்மையான, பசுமையானமற்றும் வளமான தேசத்துக்கான அறிவியல் தொழில்நுட்பம் மற்றும் புதிய கண்டு பிடிப்புகள்என்ற கருப்பொருளில் அமைந்தஇந்த மாநாடு, குழந்தைகளிடம் அறிவியல்பூர்வமான ஆர்வத்தை வளர்க்கும் நோக்கில்ஆண்டுதோறும் மாவட்ட,மாநில மற்றும் தேசிய அளவில்நடத்தப்படுகிறது.
மாவட்ட மாநாட்டுக்கு மாவட்ட துணைத் தலைவர் டி.சாந்தி தலைமை வகித்தார்.
மாவட்டச் செயற்குழு உறுப்பினர் என்.சத்தியமூர்த்தி முன்னிலை வகித்தார். முன்னாள் மாநிலத் தலைவர் எஸ்.மோகனா மாநாட்டை தொடங்கி வைத்துப் பேசினார்.
‘இந்து தமிழ் திசை’ நாளிதழின் உதவி செய்தி ஆசிரியர்சுஜாதா, பள்ளி தலைமையாசிரியை சகுந்தலா சுந்தரம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
மாவட்ட இணைச் செயலாளர் எஸ்.மாரிமுத்து, உமர்ஷெரிப் ஆகியோர் ஒருங்கிணைத்தனர். ஆசிரியர்களுக்கான கருத்தமர்வு நிகழ்வில் கருத்தாளர்களாக பாரதிதாசன் பல்கலைக்கழக வரலாற்றுத் துறைத் தலைவர் சீனிவாசராவ், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் மற்றும்கலைஞர்கள் சங்க மாவட்டக் குழு உறுப்பினர் மாறன் ஆகியோர் பங்கேற்றனர். மாவட்ட துணைத் தலைவர் ஆர்.சீத்தா,செயற்குழு உறுப்பினர் வி.ரங்கராஜன் ஆகியோர் ஒருங்கிணைத்தனர். மாநாட்டில் 60-க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஆய்வறிக்கைகளை சமர்ப்பித்தனர்.
மாலையில் நடைபெற்ற நிறைவு நிகழ்ச்சிக்கு மாவட்டத் தலைவர் எம்.அசோக் தலைமை வகித்தார். மாவட்டச் செயற் குழு உறுப்பினர் பி.பி.சுப்பிரமணியன், கல்லூரி மாணவர்கள் கிளைத் தலைவர் எ.கலைவாணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநாட்டில் பங்குபெற்ற குழந்தை விஞ்ஞானிகள் மற்றும் வழிகாட்டி ஆசிரியர்களுக்கு வட்டாரக் கல்வி அலுவலர் ஆர்.ஜெயலட்சுமி, ஏஜிஎம் மேல்நிலைப் பள்ளித் தாளாளர் ஆர்.மனோகரன் ஆகியோர் பரிசுகள் வழங்கிப் பாராட்டினர். தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநில துணைத் தலைவர்வி.சுகுமாரன் நிறைவுரையாற்றினார்.
நிறைவு நிகழ்ச்சியில், எஸ்பிஐஓஏ மெட்ரிக் பள்ளி முதல்வர் வி.அம்புஜம், ஜமால் முகமது கல்லூரி பேராசிரியர் ஆர்.ஜாகீர் உசேன், மாவட்டதுணைத் தலைவர் ஜெ.மனோகர் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT