Published : 17 Oct 2019 09:55 AM
Last Updated : 17 Oct 2019 09:55 AM
பெரம்பலூர்
பெரம்பலூர் மாணவர் நவீன் விக்னேஸ் நாசாவி்ன் நீல் ஆம்ஸ்ட்ராங் விருது பெற்றுள்ளார்.
பெரம்பலூரைச் சேர்ந்த சரவணன் -நித்யா தம்பதியரின் மகன் நவீன் விக்னேஷ். இவர்,உடுமலைப்பேட்டை அருகேயுள்ள அமராவதி சைனிக் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார்.
இந்தியாவிலிருந்து இளம் விஞ்ஞானிகளுக்கான இன்டர்நேஷனல் ஸ்பேஸ் சயின்ஸ் கான்பரன்சிங் போட்டியில் பங்கேற்று, அக்.5-ம்
தேதி அமெரிக்காவில் உள்ளநாசா விண்வெளி ஆராய்ச்சி மையத்துக்குச் சென்றார்.
அங்கு நடைபெற்ற போட்டியில், நாடு முழுவதிலும் இருந்து கலந்துகொண்ட 65 மாணவர்களில், மாணவர் நவீன் விக்னேஷ் 6-வது இடத்தை பிடித்து, நீல் ஆம்ஸ்ட்ராங் என்ற சிறப்பு விருதை பெற்றார்.
அண்மையில் சொந்த ஊர் திரும்பிய மாணவர் நவீன் விக் னேஷை, பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் வே.சாந்தா, மாவட்ட வருவாய் அதிகாரி ராஜேந்திரன், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கு.அருளரங்கன் ஆகியோர் நேரில் வரவழைத்து பாராட்டினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT