Published : 07 Oct 2019 06:38 PM
Last Updated : 07 Oct 2019 06:38 PM
விருதுநகர்
எளிய முறையில் பாடங்களைக் கற்பித்து மாணவர்களுக்கு சலிப்பு ஏற்படாமல் புரிய வைப்பதும் ஒரு கலைதான். அந்த வகையில் அரசு தேர்வு எழுதும், குறிப்பாக பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 மாணவர்களுக்காக யூடியூப்மூலம் எளிய செயல் விளக்கங்களுடன் பாடங்களை இலவசமாக நடத்தி வருகிறது சிவகாசியில் உள்ள கலா பாரதிஅகாடமி.
ஓய்வு பெற்ற பேராசிரியர் க.யோகராஜன், கல்வியாளர் ஜெயபால் ஆகியோர் இணைந்து பொறியியல் பட்டதாரியான ஜெ.சந்திரமோகன் என்பவரது தொழில்நுட்ப உதவியுடன் கலாபாரதி அகாடமி காணொளித் தொகுப்புகளை பதிவேற்றம் செய்துள்ளது.
இது குறித்து பேராசிரியர் க.யோக ராஜன் கூறியதாவது:
கற்பிப்பது ஒரு பெரும் கலை. கற்பிக்கும் முறையின் பெயர் pedagogy. Pedagogical process என்பது மாணவர்களின் சிந்தனை (cognitive process of thinking) வளர்ச்சிக்கு இயைந்த முறையில் விவாதிப்பது எனப் பொருள்படும். எண்ணற்ற கேள்விகளை மாணவச் செல்வங்களுக்கு கிளர்ந்தெழச் செய்வதே எங்கள் நோக்கம்.
இதுவரை இயற்பியல், கணிதம், உயிரியல், வேதியியல், விலங்கியல் மற்றும் பொது அறிவியல் தொடர்பாக 4,500 காணொளிகள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. இவை அனைத்தும் பிளஸ் 1 மற்றும் பிளஸ்-2 மாணவர்களுக்கு பாடத் திட்டம் வாரியாக பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. வாரியத் தேர்வு, நீட் தேர்வு ஆகியவற்றுக்குத் தயாராகும் மாணவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.
http://www.youtube.com/c/KalabharathiAcademy என்ற முகவரியில் எங்களது கல்வித் தொகுப்பைக் காணலாம் என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT