Published : 19 Feb 2020 08:06 AM
Last Updated : 19 Feb 2020 08:06 AM

ஆட்சியருடன் கலந்துரையாடிய பள்ளி மாணவர்கள்

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் பி.உமா மகேஸ்வரியுடன் கலந்துரையாடிய செட்டிக்காடு அரசு தொடக்கப் பள்ளி மாணவ, மாணவிகள்.

புதுக்கோட்டை

புதுக்கோட்டை ஆட்சியர் அலுவலகத் தின் செயல்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியருடன் அரசு தொடக்கப் பள்ளிமாணவ, மாணவிகள் கலந்துரையாடி னர்.

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே உள்ள செட்டிக்காடு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியை சேர்ந்த மாணவ, மாணவிகள் தங்கள்பாடப்புத்தகத்தில் இடம் பெற்றுள்ளமாவட்ட நிர்வாகத்தின் நடைமுறைகளை தெரிந்து கொள்வதற்காக திங்கள்கிழமை ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்தனர். அவர்களை பள்ளியின் தலைமை ஆசிரியை லீமா ரோஸ்லின்ட் தலைமையில் ஆசிரியர்கள் பாலச்சந்திரன், அருண்நாதன் ஆகியோர் அழைத்து வந்திருந்தனர்.

மன்னராட்சி காலத்தில் கட்டப்பட்டஅரண்மனையில் இயங்கி வரும் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் கட்டுமானங்களை மாணவர்கள் பார்த்து அதிசயித்தனர். மேலும், குறைதீர்ப்பு கூட்டம் நடைபெற்ற இடத்தில் பொதுமக்களின் மனுக்கள் பதிவு செய்யப்படுதல், மனுக்கள் மீதான விசாரணை போன்றவற்றையும் பார்வையிட்டனர். மாவட்ட ஆட்சியர் பி.உமா மகேஸ்வரி, மாணவர்களை அழைத்து, தனது அலுவலகத்தில் உள்ள கூட்டரங்கம், அலுவலக பிரிவுகள், காணொலிக்காட்சி அறை, மாவட்ட ஆட்சியர் அறை, மக்கள் குறைதீர்க்கும் பிரிவு போன்ற முக்கிய இடங்களுக்கு நேரடியாக அழைத்துச் சென்று ஒவ்வொரு இடத்திலும் நடைபெறும் பணிகள் குறித்து விளக்கினார். பின்னர், கூட்ட அரங்கில் மாணவ, மாணவிகளுடன் ஆட்சியர் கலந்துரையாடினார். அப்போது, மாணவ, மாணவிகள் ஆங்கிலம் மற்றும்தமிழில் சரளமாக கேள்வி கேட்டு ஆட்சியரை வியக்க வைத்தனர்.

அப்போது ஆட்சியர் உமா மகேஸ்வரி பேசும்போது, ‘‘அரசுப் பள்ளி மாணவர்கள் தங்கள் பாடத்தில் இடம் பெற்றிருந்த மாவட்ட நிர்வாகத்தின் நடைமுறைகளை நேரடியாக தெரிந்துகொள்ள இங்கு வந்திருப்பது பாராட்டுக்குரியது.

இம்மாணவர்களில் பலர் எதிர் காலத்தில் ஆட்சியராக வரவேண்டும் என லட்சியம் கொண்டிருப்பதை அறிந்து மகிழ்ச்சி அடைகிறேன். மேலும் பலர் இயற்கை விவசாயிகளாகவும், விஞ்ஞானிகளாகவும் ஆக விருப்பம் தெரிவித்தனர்.

அரசுப் பள்ளி மாணவர்கள் எதிர்காலத்தில் உயர்ந்த நிலையை அடையும் வகையில் அவர்களுக்கு இந்நிகழ்வின் வாயிலாக ஊக்கமளிக்கப்பட்டுள்ளது. மாணவர்களின் லட்சியம் நிறைவேற வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்’’ என்றார்.

மாவட்ட ஆட்சியரை சந்தித்ததும், அவர் அளித்த தன்னம்பிக்கையும் தங்களுக்கு மகிழ்ச்சியளிப்பதாக மாணவ, மாணவிகள் தெரிவித்தனர்.

அப்போது மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் த.விஜயலட்சுமியும் உடனிருந்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x