Published : 31 Jan 2020 08:22 AM
Last Updated : 31 Jan 2020 08:22 AM
விருதுநகரில் மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் நேற்று நடைபெற்றன.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் மாவட்ட விளையாட்டரங்கில் நடைபெற்ற இப்போட்டிகளை மாவட்ட ஆட்சியர் இரா.கண்ணன் தொடங்கிவைத்தார். மாவட்ட வருவாய் அலுவலர் கோ.உதயகுமார், மாவட்ட விளையாட்டு அலுவலர் ராஜா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இதில், கால் ஊனமுற்றோருக்கு 50 மீ. ஓட்டப் போட்டி, கை ஊனமுற்றோருக்கு 100 மீ.ஓட்டப் போட்டி, குள்ளமானோருக்கு 50 மீ.ஓட்டப் போட்டி, கால் ஊனமுற்றோருக்கு குண்டு எறிதல், இரு கால்களும் ஊனமுற்றோருக்கு 100மீ சக்கர நாற்காலி போட்டிகள் நடத்தப்பட்டன.
முற்றிலும் பார்வையற்றோருக்கு 50 மீ.ஓட்டப் போட்டி, குண்டு எறிதல், மிக குறைந்த பார்வையற்றோருக்கு நின்ற நிலையில் தாண்டுதல், சாப்ட் பால் எறிதல் போட்டிகளும், மனநலம் பாதிக்கப்பட்டவர்களில் புத்தி சுவாதினத் தன்மை முற்றிலும் இல்லாதோருக்கு 50 மீ.ஓட்டப் போட்டி, சாப்ட் பால் எறிதல், புத்தி சுவாதினத் தன்மை நல்ல நிலையில் இருப்போருக்கு 100 மீ.ஓட்டப் போட்டி,குண்டு எறிதல், மூளை நரம்பு பாதிக்கப்பட்டோருக்கு நின்ற நிலையில் தாண்டுதல் போட்டிகளும் நடத்தப்பட்டன.
காது கேளாதோருக்கு 100மீ,200மீ, 400மீ ஓட்டப் போட்டிகள், நீளம் தாண்டுதல், குண்டு எறிதல் போட்டிகளும் நடத்தப்பட்டன.
இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் சுமார் 250க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். இப் போட்டிகளில் முதலிடம் பெறும்மாணவ, மாணவிகள் மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்கும் தகுதி பெறுவார்கள்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT