Published : 29 Jan 2020 08:52 AM
Last Updated : 29 Jan 2020 08:52 AM
பர்கூர் அருகே பள்ளிப் படிப்பை பாதியில் நிறுத்திய 5 மாணவர்களை மீட்டு, அவர்கள் மீண்டும் பள்ளியில் சேர பர்கூர் எம்எல்ஏ உதவினார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் சட்டப்பேரவைக்கு உட்பட்ட ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டம்,வட்டார வள மையம் சார்பில் இடைநின்ற மாணவர்கள் கணக்கெடுப்பு மற்றும் கள ஆய்வுப் பணி நடைபெற்றது. அப்போது ஒப்பவாடி கிராமம் இருளர் காலனியில் களப்பணி மேற்கொண்ட போது, பள்ளி இடைநின்ற 5 மாணவர்கள் கண்டறியப்பட்டனர். இதுகுறித்த தகவலறிந்த சி.வி.ராஜேந்திரன் எம்எல்ஏ அந்த மாணவர்களை மீட்டு, அருகில் உள்ள ஒப்பதவாடி அரசுப் பள்ளியில் சேர்ந்து படிக்க ஏற்பாடு செய்தார்.
மாணவர்களுக்கு தேவையான கல்வி உபகரணங்களை வழங்கிய அவர், பெற்றோர்கள் தங்களது குழந்தைகளைத் தவறாமல் தொடர்ந்து படிக்க வைக்க வேண்டும் என்றும், மாணவர்களுக்கு தேவையான அனைத்து நலத்திட்டங்களையும் அரசு வழங்கி வருகிறது என்றும் அறிவுறுத்தினர். மேலும், மாணவர்கள் இடைநிற்றலை தடுக்கும் வகையில் கள ஆய்வுப் பணியை தொடர்ந்து மேற்கொள்ள வேண்டுமென கல்வித்துறை அதிகாரிகளை அவர் கேட்டுக்கொண்டார்.
களஆய்வு பணியில் மத்தூர்மாவட்ட கல்வி அலுவலர் சின்னப்பன், உதவி திட்ட அலுவலர் நாராயணா,பர்கூர் வட்டார வள மைய மேற்பார்வையாளர் குமார், வட்டார கல்வி அலுவலர் சம்பத், ஆசிரியர் பயிற்றுநர்கள் விஜயலட்சுமி, வெங்கடாசலம் ஆகியோர் ஈடுபட்டு வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT