Published : 27 Jan 2020 09:31 AM
Last Updated : 27 Jan 2020 09:31 AM
கிருஷ்ணராயபுரம் அருகே அரசு பள்ளி மாணவர் ஜெ.தண்டபாணி, கண்களைக் கட்டிக்கொண்டு சைக்கிள் ஓட்டுவதுடன், பொருட்களையும் அடையாளம் காட்டி ஆச்சரியப்படுத்துகிறார். கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரத்தை அடுத்த கோவக்குளத்தைச் சேர்ந்தவர் ஜெயபால். அவரது மகன் தண்டபாணி (13). இவர் பழைய ஜெயங்கொண்டம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருகிறார்.
இவர் தனது கண்களை துணியால் கட்டிக்கொண்டு சைக்கிள் ஓட்டுகிறார். மேலும், அவருக்கு முன் நிறுத்தும் நபர்களை அடையாளம் காட்டுவதுடன், காட்டும் பொருட்களைப் பற்றிய விவரத்தை யும் கூறுகிறார். இதுகுறித்து அறிந்த பள்ளி நிர்வாகம், ஆசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவிகளின் முன்னிலையில் தண்டபாணி கண்களை துணியால் கட்டிக்கொண்டு ரூபாய் நோட்டு, விசிட்டிங்கார்டு போன்றவற்றை காட்டி ஆசிரியர்கள் கேட்டபோது சரியாகப் பதிலளித்தார். மாணவரின் இந்த அசாத்திய திறன் ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள், அக்கம்பக்கத்தினரிடையே ஆச்சரி யத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து மாணவர் தண்டபாணி கூறியபோது, “படிப்பில் சரிவர கவனம் செலுத்த முடியாத நிலையில் நினைவாற்றாலை அதிகரிப்பதற்காக பயிற்சி பெற்றேன். அதனால் கண்களைத் துணியால் கட்டியபின்னும் எதிரே உள்ளவற்றை கண்டறியும் திறனைப் பெற்றுள்ளேன்” என்றார்.
அவரது பயிற்சியாளர் வேல் முருகன் கூறும்போது, “மாணவர்களின் கற்கும் திறன் மற்றும் நினை வாற்றாலை அதிகரிக்க பயிற்சி அளித்து வருகிறேன். அந்த வகையில் பயிற்சி பெற்ற மாணவர் தண்டபாணியின் அதீத ஆற்றல் வெளி உலகுக்குத் தெரிய வந்துள்ளது” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT