Published : 27 Jan 2020 09:24 AM
Last Updated : 27 Jan 2020 09:24 AM
‘ஓடும் பேருந்தில் ஏறவோ, இறங்கவோ மாட்டோம்' என்று மதுரை பள்ளி மாணவர்கள் சாலை பாதுகாப்பு உறுதிமொழி ஏற்றனர். மதுரை கே.புதூர் அல்அமீன் மேல் நிலைப் பள்ளியில் சாலை பாதுகாப்பு வார விழாவையொட்டி மாணவர்களுக்கு விழிப்புணர்வு முகாம் நடந்தது. பள்ளியின் தாளாளர் முகமது இதிரீஸ் தலைமை வகித்தார். உதவி தலைமை ஆசிரியர் ஜாகீர் உசேன் வரவேற்றார்.
இதில் மதுரை மாநகர் திட்டப் பிரிவு காவல் உதவி ஆய்வாளர் முருகன், போக்குவரத்து விதிமுறை, விபத்தால் ஏற்படக் கூடிய மரணம், ஊனங்கள், பொருட்சேதம், ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கான வழிமுறை ஆகியவை குறித்து மாணவர்களுக்கு அறிவுரைகளை வழங்கினார்.
அதைத்தொடர்ந்து ‘ஓடும் பேருந் தில் ஏறவோ, இறங்கவோ மாட்டேன், படியில் நின்று பயணிக்க மாட்டேன், ஆலம்புலன்ஸ், தீயணைப்பு வாகனங்களுக்கு வழி கொடுப்பேன், சாலை விபத்துக்குக் காரணமாக இருக்க மாட்டேன்’ என்பன உட்பட 16 உறுதிமொழிகளை மாணவர்கள் ஏற்றனர்.
நிறைவாக, உதவி தலைமை ஆசிரியர் ரகமத்துல்லா நன்றி கூறினார். இந் நிகழ்ச்சிக்கான ஏற்பாடு களை உடற்கல்வி ஆசிரியர்கள் அமித், காதர் ஆகியோர் செய்திருந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT