Published : 06 Dec 2019 10:21 AM
Last Updated : 06 Dec 2019 10:21 AM
உலக மண் தினத்தையொட்டி திருமானூர் அருகே அரசு பள்ளி மாணவர்களுக்கு மண்வளம் குறித்து விழிப்புணர்வு அளிக்கப்பட்டது.
அரியலூர் மாவட்டம் திருமானூர் அருகேயுள்ள க.மேட்டுத்தெரு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் உலக மண் தினத்தையொட்டி, மண் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிநேற்று நடைபெற்றது. பள்ளியின்தலைமை ஆசிரியை சகாயராணிதலைமை வகித்தார். நிகழ்ச்சியை யொட்டி, மாணவர்கள் இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட காய்கறிகள், நெல், கரும்பு உள்ளிட்டவற்றை கைகளில் வைத்துக்கொண்டு உலக உருண்டை போல அமர்ந்திருந்தனர். மண் மலடாகாமல் இருக்க வேண்டுமெனில் இயற்கை விவசாயம் செய்ய வேண்டும். பிளாஸ்டிக் பொருட்களை தவிர்க்க வேண்டும். ரசாயன உரங்களை இடுவதை தவிர்க்க வேண்டும்.
மண் வளம் காப்போம்
ஆரோக்கியமான காற்று கிடைக்கவும், நல்ல மழை பெய்யவும் அனைவரும் மரக்கன்றுகளை நட்டு வளர்க்கவேண்டும் என மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. தொடர்ந்து மண்வளம் காப்போம், இயற்கையை பாதுகாப்போம் எனமாணவர்கள் அனைவரும் உறுதிமொழி ஏற்றனர்.
இயற்கை வாழ்வியலாளர் தங்க.சண்முகசுந்தரம், இயற்கை விவசாயி நாகராஜன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவருக்கும் கரும்புச்சாறு வழங்கப்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT