Published : 04 Dec 2019 10:02 AM
Last Updated : 04 Dec 2019 10:02 AM
திருச்சி மாவட்ட தமிழ்நாடு அறிவியல் இயக்கம் மற்றும் காவேரி மகளிர் கல்லூரி இணைந்து நடத்திய கிழக்கு மண்டல அளவி லான துளிர் அறிவியல் விநாடி-வினா நிகழ்ச்சி நவ.30-ம் காவேரி மகளிர் கல்லூரியில் நடைபெற்றது.
தொடக்க நிகழ்ச்சிக்கு, அறி வியல் இயக்க மாவட்ட துணைத் தலைவர் சாந்தி தலைமை வகித் தார். மாவட்ட இணைச் செயலாளர் ஜெயச்சந்திரன், நாகை மாவட்டத் தலைவர் ஆரிப், தஞ்சாவூர் மாவட்டச் செயலாளர் முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில செயற்குழு உறுப்பினர் பிரபாகரன் தொடங்கி வைத்தார்.
கல்லூரியின் துணை முதல்வர் ராமலட்சுமி, மாநிலச் செயற்குழு உறுப்பினர் ஞானசேகரன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
துளிர் விநாடி-வினா போட்டிக்கு என்எஸ்எஸ் அலுவலர் சாத்தம்மை பிரியா தலைமை வகித்தார். பேராசிரியர்கள் மீனாட்சி, ஜெயபாரதி, காயத்ரி, இன்பைன் சிந்துஜா, ஜீனத்துனிசா, அருணா ஆகியோர் போட்டிகளை நடத்தினர்.
நிறைவு விழாவுக்கு, அறிவியல் இயக்க மாவட்டத் தலைவர் அசோக் தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் நடராஜன், மாவட்டச் செயலாளர் கள் பொன்முடி (திருவாரூர்), முத்துக்குமார் முருகேசன் (புதுக்கோட்டை) ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கல்லூரி ஆட்சிமன்றக் குழுத் தலைவர் நீலகண்டன், மாநகர வட்டாரக் கல்வி அலுவலர் ஜெயலட்சுமி மாநில துணைத் தலைவர் சுகுமாரன் ஆகியோர் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கினர். அறிவியல் இயகக் மாநிலச் செயலாளர் ஸ்டீபன்நாதன் நிறைவுரையாற்றினார்.
போட்டிகளில் திருச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டை, திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களிலிருந்து 48 பள்ளிகளைச் சேர்ந்த 150-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவர்கள் பங்கேற்றனர். மாவட்டச் செயலா ளர் மணிகண்டன் வரவேற்றார். முகமது யாசர் நன்றி கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT