இந்திய அரசியல் அமைப்பு தின விழாவையொட்டி ஜெயங்கொண்டம் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகள் நடத்திய விழிப்புணர்வு பேரணி.
நம்ம ஊரு நடப்பு
ஜெயங்கொண்டம் அரசு பள்ளியில் இந்திய அரசியலமைப்பு தினவிழா கொண்டாட்டம்
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 70-வது இந்திய அரசியலமைப்பு தின விழாவை முன்னிட்டு கருத்தரங்கம் மற்றும் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
பேரணியை உடையார்பாளையம் கல்வி மாவட்ட அலுவலர் பாலசுப்பிர மணியம் தலைமை வகித்து தொாடங்கி வைத்தார்.
பேரணி, பள்ளி வளாகத்தில் தொடங்கி அண்ணா சிலை, கடைவீதி வழியாக சென்று மீண்டும் பள்ளியில் முடிவடைந்தது. இப்பேரணியில் பள்ளி ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர்.
தொடர்ந்து நடைபெற்ற கருத்தரங்கில், வழக்கறிஞர்கள் செந்தில்குமார், மனோகரன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை உடற்கல்வி இயக்குநர் வேல் முருகன், உடற்கல்வி ஆசிரியர் சேகர் ஆகியோர் செய்திருந்தனர்.
முன்னதாக பள்ளியின் தலைமை ஆசிரியர் ராஜ்குமார் வரவேற்றார். நிறைவாக, உதவி தலைமையாசிரியர் இளங்கோவன் நன்றி கூறினார்.
