Published : 25 Nov 2019 09:59 AM
Last Updated : 25 Nov 2019 09:59 AM
சிவகளை பகுதியில் பழங்காலத்தைய முதுமக்கள் தாழிகள், இரும்பிலான அரிய வகை பொருட்கள், போர்க் கருவிகள் போன்றவை கண்டறியப்பட்டுள்ளன.
பழங்காலப் பொருட்களை பள்ளி, கல்லூரி மாணவர்கள் பார்த்துச் செல்கின்றனர். இந்நிலையில், நாசரேத்தை அடுத்த ஆனந்தபுரம் ரஞ்சி ஆரோன் நினைவு மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் டேவிட் வசந்தகுமார் தலைமையில் வரலாற்று ஆசிரியர் ஸ்டீபன், ஆசிரியர்கள், மாணவர்கள் சிவகளை தொல்லியல் களப்பகுதிகளை பார்வையிட்டனர்.
அவர்களுக்கு சிவகளை பகுதியைஆய்வு செய்துவரும் ஸ்ரீவைகுண்டம் குமரகுருபர சுவாமிகள் மேல்நிலைப் பள்ளி வரலாற்று ஆசிரியரான மாணிக்கம் பழங்கால பொருட்கள் மற்றும் மக்களின் வாழ்க்கை முறையை விளக்கினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT