Published : 22 Nov 2019 09:10 AM
Last Updated : 22 Nov 2019 09:10 AM
அரியலூர்
அரியலூர் மாவட்டம் கீழகாவட்டாங் குறிச்சி அரசு மேல்நிலைப் பள்ளியில் தேசிய இயற்கை மருத்துவ தினத்தை முன்னிட்டு தேசிய பசுமைப் படை மாணவர்களுக்கு மூலிகைகளை அடையாளம் காணும் பயிற்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில், கிராம வாழ்வியல்இயற்கை மருத்துவ சங்க செயலாளர் தங்க.சண்முகசுந்தரம் கலந்து கொண்டு, பள்ளி வளாகத்தில் வளர்ந்திருக்கும் செடிகளில் மூலிகைச் செடிகளை அடையாளம் காட்டி, அவற்றை எவ்வாறு அடையாளம் காண்பது என தெளிவுபடுத்தினார். மேலும், அதில் பச்சையாக சாப்பிடக் கூடிய மூலிகை செடிகள், மாவுப் பொருட்களுடன் சேர்த்து சாப்பிடக்கூடிய மூலிகைச் செடிகள், உணவுடன் கலந்து சாப்பிடக் கூடிய மூலிகைச் செடிகள், அதன்மூலம் கிடைக்கு நன்மைகள் போன்றவற்றை விளக்கிக் கூறினார்.
தொடர்ந்து, மாப்பிள்ளை சம்பா உள்ளிட்ட பாரம்பரிய நெல் ரகங்கள் குறித்துமாணவர்களுக்கு எடுத்துரைத்தார். பள்ளியின் தலைமை ஆசிரியர் செல்வக்குமார், உதவி தலைமைஆசிரியர் கலைச்செல்வன், தேசியபசுமைப்படை ஒருங்கிணைப்பாளர் பிரேமா, உடற்கல்வி ஆசிரியர் ராஜசேகர் கலந்து கொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT