Published : 18 Nov 2019 10:39 AM
Last Updated : 18 Nov 2019 10:39 AM
குழந்தைகள் தினத்தையொட்டி கரூர் மாவட்டம் குளித்தலை அருகே பொய்யாமணியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு மாறுவேட போட்டி நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.
குளித்தலை பொய்யாமணி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் குழந்தைகள் தினவிழா வியாழக்கிழமை நடைபெற்றது. இவ்விழாவுக்கு தலைமை ஆசிரியை முத்துலட்சுமி தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக குளித்தலை சார் ஆட்சியர் ஷேக் அப்துல் ரகுமான் கலந்துகொண்டு மாணவ, மாணவிகளிடம் கலந்துரையாடினார். மேலும், போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கும் விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கும் பரிசு வழங்கி சிறப்புரையாற்றினார்.
விழாவின் சிறப்பு அம்சமாக, மாணவ, மாணவிகளுக்கு நடந்த மாறுவேடப் போட்டியில் ஜவஹர்லால் நேரு, மகாத்மா காந்தி, ஆசிரியர், மாவட்ட ஆட்சியர், டாக்டர், மீன் வியாபாரி, குடுகுடுப்பைக்காரர், பிச்சைக்காரர் உள்ளிட்ட மாறுவேடங்களில் மாணவ, மாணவிகள் வந்து தங்களின் திறமையை வெளிப்படுத்தினர். 1 மற்றும் 2-ம் வகுப்பு வரையிலான பிரிவில் முதல் பரிசு கவியரசு, 2-ம் பரிசு சிவஜோதி, 3-ம் பரிசு மிதுன்கார்த்திக். 3 முதல் 5-ம் வகுப்பு வரையிலான பிரிவில் முதல் பரிசு ஆகாஷ், 2-ம் பரிசு மதுநிஷா, 3-ம் பரிசு தர்ஷினி. 6 முதல் 8-ம் வகுப்பு வரையிலான பிரிவில் முதல் பரிசு தர்ஷினி, 2-ம் பரிசு சந்தியா, 3-ம் பரிசு தினேஷ் பெற்றனர்.
முன்னதாக, 1 முதல் 8-ம் வகுப்பு- வரை பாட்டுப் போட்டி, 3 முதல் 8-ம் வகுப்பு வரை பேச்சுப் போட்டி நடைபெற்றது. அதில், வெற்றி பெற்றவர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. மழலையர் மற்றும் நடுநிலைப்பள்ளி மாணவ, மாணவிகள் 225 பேருக்கு ஸ்ரீராதாகிருஷ்ணா சுவாமிஜி அறக்கட்டளை சார்பில் அதன் நிர்வாகி சுஜாதா, லட்டு, காரம் வழங்கினார்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஆசிரியை சாந்தி செய்திருந்தார். விழாவில், பள்ளி பட்டதாரிஆங்கில ஆசிரியர் பூபதி, தமிழ்ஆசிரியை தமிழ்பூங்குயில் மொழி,ஆசிரியைகள் காந்திமதி, உமா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT