Published : 24 Oct 2019 10:47 AM
Last Updated : 24 Oct 2019 10:47 AM
சென்னை/கோவை
தீபாவளியை பண்டிகையை விபத்து இல்லாமல் கவனமுடன் கொண்டாட வேண்டும் என்று மாணவ-மாணவிகளுக்கு பள்ளிக்கல்வி இயக்குநர்எஸ்.கண்ணப்பன் அறிவுரை வழங்கி யுள்ளார்.
தீபாவளி பண்டிகை வருகிற 27-ம்தேதி (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்படுகிறது. தீபாவளியை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பட்டாசுகள் வெடித்து கொண்டாடுவது வழக்கம்.
இந்நிலையில் பள்ளி மாணவர்கள்விபத்தில்லாமல் தீபாவளியை கொண் டாடுவது குறித்து பள்ளிக்கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக பள்ளிக்கல்வி இயக்குநர்எஸ்.கண்ணப்பன், அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை:
தீபாவளி நாளில் முன்னெச்சரிக்கையுடன் பட்டாசு வெடித்து பண்டிகையை மகிழ்ச்சியாக கொண்டாட மாணவர்களுக்கு ஆசிரியர்கள் தகுந்த அறிவுரைகள் வழங்க வேண்டும்.
ஆசிரியர்களுக்கு வேண்டுகோள்
அதன்படி, பட்டாசு வெடிக்கும் போது அருகே தண்ணீர் வைத்துக் கொள்ள வேண்டும். தளர்வான ஆடைகளை அணிய வேண்டாம், கையில் வைத்து வெடிக்கக்கூடாது. மருத்துவமனை அருகே அல்லது கூட்டமான பகுதிகளில் பட்டாசுகளை வெடிக்காதீர்கள். பெட்டி, பாட்டில்களில் வைத்தோ, அதிக சப்தமுள்ள பட்டாசுகளையோ வெடிக்க வேண்டாம். விலங்குகளை துன்புறுத்தும் வகையில் பட்டாசுகளைவெடிக்க வேண்டாம் என்பது உட்பட தேவையான அறிவுரைகள் வழங்கிமகிழ்ச்சி நிறைந்த விபத்தில்லா தீபா
வளியை கொண்டாட மாணவர்களுக்கு போதிய விழிப்புணர்வை ஆசிரியர்கள் ஏற்படுத்த வேண்டும்.
அதற்காக தினமும் பள்ளி இறைவணக்கக் கூட்டத்தில் தீ பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் அதிலிருந்து தப்பிப்பது குறித்தும் மாணவர்களுக்கு தலைமை ஆசிரியர்கள் எடுத்துரைக்க வேண்டும்.
இவ்வாறு அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
செயல்விளக்கம்
இதற்கிடையே, விபத்தில்லாமல் பாதுகாப்பாக பட்டாசு வெடித்து தீபாவளியை கொண்டாட மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தமிழகம் முழுவதும் தீயணைப்புத் துறையினர் செயல்விளக்கம் அளித்து வருகின்றனர். கோவை புலியகுளத்தில் உள்ள புனித அந்தோணியர் உயர்நிலையின் தேசிய மாணவர் படை சார்பில், தீபாவளி பண்டிகையொட்டி விபத்து ஏற்படாமல் பாதுகாப்பாக பட்டாசு வெடிப்பது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் செயல் விளக்கம் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
இதில், தேசிய மாணவர் படை கமாண்டிங் அதிகாரி லெப்டினன்ட் கர்னல் கிரீஷ் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். 'கோவை வடக்கு தீயணைப்பு நிலைய அலுவலர் இரா.செல்வமோகன், பாதுகாப்பாக பட்டாசு வெடிப்பது குறித்து விளக்கம் அளித்தார்.
அதைத்தொடர்ந்து, தீயணைப்புத்துறையினர், பாதுகாப்பாக பட்டாசுவெடிப்பது எப்படி? என்றும், விபத்துகளை ஏற்பட்டால் பாதிக்கப்பட்டவர்களை மீட்பது எப்படி? என்று செயல் விளக்கம் செய்து காண்பித்தனர்.
இந்நிகழ்ச்சியில் தலைமைஆசிரியை அமலோற்பவமேரி, தேசியமாணவர் படை அதிகாரி ஆல்பர்ட் அலெக்ஸாண்டர் மற்றும் ஏராளமான மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT