Published : 24 Oct 2019 10:38 AM
Last Updated : 24 Oct 2019 10:38 AM
திருவாரூர்
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் ஒன்றியம் தென்குவளவேலி அரசு உயர்நிலைப் பள்ளியில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு செவ்வாய்க் கிழமை சிறப்பு பட்டிமன்றம் நடை பெற்றது.
‘தீபாவளிக்கு மகிழ்ச்சியை தருவதுபட்டாசா? பலகாரமா? புத்தாடையா?’ என்ற தலைப்பில் நடைபெற்ற பட்டிமன்றத்துக்கு ஆசிரியர் சூரியகுமார் நடுவராக இருந்தார். ‘பட்டாசே’ என்ற தலைப்பில் மாணவிகள் நிகிதா, சுபஸ்ரீ ஆகியோரும், ‘பலகாரமே’ என்றதலைப்பில் மாணவிகள் விஷ்ணுபிரியா, ஜெகதீஸ்வரி ஆகியோரும், ‘புத்தாடையே’ என்ற தலைப்பில் மாணவிகள் கோபிகா, ஹரிணி ஆகியோரும் பேசினர்.
நிகழ்ச்சியில் பள்ளித் தலைமை ஆசிரியை ஜான்பிரபா, ஆசிரியர்கள் ராமமூர்த்தி, இளையராஜா, விஜயகுமாரி உட்பட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பள்ளியின் தமிழ் இலக்கிய மன்ற பொறுப்பாளர் ஆசிரியை ரேணுகா செய்திருந்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT