Published : 21 Oct 2019 09:27 AM
Last Updated : 21 Oct 2019 09:27 AM
சிவகங்கை
சிவகங்கை மவுண்ட் லிட்ரா ஜீ பள்ளியில் அப்துல் கலாம் பிறந்த நாளையொட்டி புதுமையான முறையில் ஓவியப் போட்டி நடந்தது. இதில் ஒன்றாம் வகுப்பு முதல் பிளஸ் 2 மாணவர்கள் வரை பங்கேற்றனர்.
ஸ்கேட்டிங் செய்தவாறு படம் வரைதல், படத்தை தலைகீழாக வரைதல், வாய் மூலம் வரைதல், நடனமாடியவாறு வரைதல், மணல் ரங்கோலி ஓவியம் எனப் புதுமையான முறையில் அப்துல் கலாம் உருவப் படங்களை வரைந்து மாணவர்கள் அசத்தினர்.
போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இதற்கான ஏற்பாடுகளை பள்ளி கல்வித் திட்ட இயக்குநர் துரைப்பாண்டியன், ஓவிய ஆசிரியர் சங்கர் செய்திருந்தனர்.
மாணவர்களின் புதுமையான முயற்சி குறித்து பள்ளியின் தலைவர் பால.கார்த்திகேயன் கூறுகையில், "மாணவர்களின் திறமைகளை ஊக்கப்படுத்தவே புதுமையான முறையில் ஓவியப் போட்டிகளை நடத்தினோம். இதன் மூலம் ஓவியங்களின் புதுமையை விரும்பும் மாணவர்களை கண்டறிய முடிந்தது" என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT