Published : 18 Oct 2019 09:36 AM
Last Updated : 18 Oct 2019 09:36 AM
திருவாரூர்
பருவ வயதில் உடல்ரீதியில் என்னென்ன மாற்றங்கள் ஏற்படும் என்பது குறித்து உலக மனநல நாள் விழாவில் பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு அளிக்கப்பட்டது.
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி தேசிய மேல்நிலைப்பள்ளியில், மாவட்ட மனநல திட்டத்தின்சார்பில் உலக மனநல நாள் விழா புதன்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு பள்ளியின் தலைமையாசிரியர் டிஎல்.ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தார். முதுகலை பட்டதாரி ஆசிரியர் ஆர்.உலகநாதன் முன்னிலை வகித்தார். முதுகலை வேதியியல் ஆசிரியர் எஸ்.கமலப்பன் வரவேற்றார்.
விழாவில், மன்னார்குடி அரசுமாவட்ட தலைமை மருத்துவமனை உளவியல் ஆலோசகர் தி.யோகாம்பாள், சமூகப் பணியாளர் டி.கவிதா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர். பருவ வயதில் மாணவர்கள் மற்றும் மாணவிகளுக்கு ஏற்படும் உடல் ரீதியான மாற்றங்கள், உடல், மன தேவைகள், மனவெழுச்சி, தற்கொலை எண்ணங்கள், சமூக வலைதளங்களால் ஏற்படும் சிந்தனை மாற்றங்கள், எண்ண அலைகளின் தாக்கத்தால் ஏற்படும் கனவு ஆகியவை குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மாணவர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு நிபுணர்கள் விளக்கம் அளித்தனர்
‘தற்கொலை எண்ணமும் அதைத் தடுக்கும் வழிமுறைகளும்’ என்னும் தலைப்பில் நடைபெற்ற பேச்சுப் போட்டியில் 12-ம் வகுப்பு மாணவர் எஸ்.சத்யநாராயணன், 10-ம் வகுப்பு மாணவர் ஆர் மாதேஷ், 9-ம் வகுப்பு மாணவி ஜே. கல்பனா சாவ்லா ஆகியோர்
முறையே முதல் 3 பரிசுகளைப் பெற்றனர். நிறைவாக, ஆசிரியர் அன்பரசு நன்றி கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT