அலையாத்தி காட்டில் ஆய்வு செய்யும் பள்ளி மாணவர்கள்

அலையாத்தி காட்டில் ஆய்வு செய்யும் பள்ளி மாணவர்கள்

Published on

திருவாரூர்

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை புதுத்தெருவில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் சுற்றுச்சூழல் மன்றத்தின் சார்பில் 6,7,8-ம் வகுப்பு மாணவர்கள், கஜா புயலுக்குப் பின்னர்முத்துப்பேட்டை அலையாத்திக்காடு பகுதியில் நிலவும் சூழ்நிலைகள், மாறியுள்ள தட்பவெப்ப நிலைகள் குறித்து ஆய்வு செய்ய முடிவு செய்துள்ளனர். இதற்கான வழிகாட்டி ஆசிரியர்களாக ஆசிரியர்கள் அன்பரசு, செல்வ சிதம்பரம், முருகேசன் ஆகியோர் உள்ளனர்.

இந்த ஆய்வு குறித்து ஆலோசனை கேட்பதற்காக மாணவர்கள் கடந்த சனிக்கிழமை முத்துப்பேட்டையில் உள்ள வனத்துறை அலுவலகத்துக்குச் சென்றனர். அப்போது, முத்துப்பேட்டை வனச்சரகஅலுவலர் தாஹிர்அலி, அலையாத்திக் காடுகள், அங்குள்ள தாவரங்கள், அவற்றால் கிடைக்கும்நன்மைகள் குறித்து மாணவர் களுக்கு விளக்கினார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in