Published : 15 Oct 2019 09:07 AM
Last Updated : 15 Oct 2019 09:07 AM
திருநெல்வேலி
33-வது மாநில ஜூனியர் தடகளப் போட்டி ஈரோட்டில் நடைபெற்றது. இதில் வடக்கன்குளம் பால கிருஷ்ணா மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் 4 தங்கம், 6 வெள்ளி, 1 வெண்கலப் பதக்கங்களை பெற்றனர்.
18 வயது பிரிவு மும்முறை தாண்டுதலில் பபிஷா முதலிடமும், நீளம் தாண்டுதலில் 2-ம் இடமும், 3,000 மீட்டர் ஓட்டத்தில் ராமன் முதலிடமும், ஈட்டி எறிதலில் கிளாட்சன் துரை 2-ம் இடமும், உயரம் தாண்டுதலில் தேவகார்த்திக் 2-ம் இடமும் பெற்றனர். 16 வயது பிரிவு ஈட்டி எறிதலில் கார்த்திகா முதலிடமும், அலங்கார பாண்டியன் 2-ம் இடமும் பெற்றனர்.
14 வயது பிரிவு போட்டியில் 100 மீ. ஓட்டத்தில் பாலஜீவா 2-ம் இடமும், நீளம் தாண்டுதலில் 2-ம் இடமும், 100 மீ. ஓட்டத்தில் விஷ்ணு மூன்றாமிடமும், டிரையத்லானில் விஷ்ணு முதலிடமும் பெற்றுள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT