Published : 22 Oct 2020 06:58 PM
Last Updated : 22 Oct 2020 06:58 PM
மருத்துவக் கலந்தாய்வில் என்ஆர்ஐ மாணவர்களுக்கான இட ஒதுக்கீட்டுச் சேர்க்கை குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மருத்துவ நுழைவுத்தேர்வான நீட் தேர்வு முடிவுகள் அக்.16-ம் தேதி வெளியாகின. இதில் நாடு முழுவதும் 56.44% மாணவர்கள் மருத்துவம் படிக்கத் தகுதி பெற்றுள்ளனர். இவர்களுக்கான கலந்தாய்வு ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் வெளிநாடு வாழ் இந்திய (என்ஆர்ஐ) மாணவர்களுக்கான இட ஒதுக்கீட்டுச் சேர்க்கை குறித்து மருத்துவக் கலந்தாய்வுக் குழு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதன்படி இந்திய மாணவர்கள் அல்லது பிற ஒதுக்கீட்டுப் பிரிவு மாணவர்கள் என்ஆர்ஐ பிரிவுக்கு மாற்றிக்கொள்ள விரும்பினால், நாளை (அக்.23) வரை விண்ணப்பிக்கலாம்.
இதற்குப் போதிய ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டும். குறிப்பாக நீட் 2020 மதிப்பெண் சீட்டு, படிக்க வைப்பவரின் கடவுச்சீட்டு, விசா ஆகிய ஆவணங்கள், அவருக்கும் மாணவருக்குமான உறவு, படிக்க வைப்பவர் குறித்த தூதரகச் சான்றிதழ், முழு மருத்துவப் படிப்பையும் படிக்கவைப்பதாக அவர் உறுதியளிக்கும் நோட்டரி சான்றிதழ் ஆகியவற்றைச் சமர்ப்பிக்க வேண்டியது அவசியம்.
இந்த விவரங்களை nri.adgmemcc1@gmail.com என்ற இ-மெயில் முகவரிக்கு அக்.23-ம் தேதி வரை அனுப்பலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT