Published : 23 Aug 2020 09:26 AM
Last Updated : 23 Aug 2020 09:26 AM
கரோனா பாதிப்பால் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலை யில் நடப்பாண்டில் இதுவரையில் பள்ளிகள் திறக்கப்படவில்லை.
ஆனாலும், அரசு மற்றும் தனி யார் பள்ளிகளில் ஆன்லைன் வகுப்புகள் நடைபெற்று வருகின்றன.
பள்ளிகள் திறக்கப்படாத நிலையிலும் கடந்த 3 மாதங்களாக தனியார் பள்ளிகளில் சேர்க்கைகள் நடைபெற்று வருகின்றன. கடந்தசில தினங்களுக்கு முன் அரசுப்பள்ளிகளிலும் 1,6,9-ம் வகுப்பு களுக்கான சேர்க்கை தொடங்கி யிருக்கிறது. பாட புத்தகங்கள் வழங்கப்பட்டு, வீடுகளில் இருந்தபடி, ஆசிரியர்களின் வழி காட்டுதலில் இணையதளம் வழியே மாண வர்கள் பயின்று வருகின்றனர்.
இதற்கிடையே, 25 மாணவர்களுக்கும் குறைவாக உள்ள தொடக்க, நடுநிலைப் பள்ளிக ளைக் கண்டறிந்து அதன் பெயர்ப்பட்டியலை உடனடியாக அனுப்பு மாறு, அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள், சார்நிலை அலுவலர்களுக்கு தமிழக பள்ளி கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
மேலும், 25 மாணவர்களுக்குக் குறைவான பள்ளிகளில் பயிலும் மாணவர்களைச் சேர்ப் பதற்கு, அருகில் உள்ள பள்ளிகளின் விவரம், அப்பள்ளிகள் அமைந் துள்ள தூரம் போன்ற விவரங்களும் அப்படிவத்தில் கோரப்பட்டுள்ளன.
இதனால் 25 மாணவர்களுக்குக் குறைவான பள்ளிகள் மூடப்படும் என்ற அச்சம், அதில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு ஏற்பட்டிருக்கிறது.
இந்நிலையில் விழுப்புரம் மாவட் டம், செஞ்சி,சக்கராபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில், ‘தங்கள் பள்ளியில் மாணவர்களைச் சேர்த்தால் சிறப்பு ஊக்கத் தொகையாக ரூ 1,000 தருகிறோம்’ என்று சுவரொட்டி, துண்டு பிரசுரங் கள் மூலம் விளம்பரப் படுத்தி வருகின்றனர்.
இதே போல் கணக்கன் குப்பம்ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் மாணவர்களைச் சேர்த்தால், ‘ரூ 1.000 ரொக்கப் பரிசு, அரை பவுன் தங்கம், சில்வர் குடம் வழங்கப்படும். மேலும், மாணவர்களுக்கு அரசு வழங்கும் பொருட்களும் வழங்கப்படும்’ என கிராமப்புற பெற்றோரைச் சுண்டியிழுக்கும் சுவரொட்டிகளை ஒட்டியுள்ளனர்.
இது குறித்து மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் நடராஜ னிடம் கேட்டபோது, ‘‘சக்கராபுரம்பகுதியில் நரிகுறவர் இன மாண வர்களின் பெற்றோரை கவரும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக தெரிகி றது. கணக்கன் குப்பம் பள்ளி பற்றி விசாரணை மேற்கொள்கிறேன்” என்றார்.
மேலும், இதுகுறித்து வட்டார தொடக்க கல்வி அலுவலர் அக்சீலி யம் பெலிக்ஸிடம் கேட்டபோது, “கணக்கன்குப்பம் பள்ளியில் கடந்தசில ஆண்டுகளாக மாணவர் சேர்க் கையை அதிகரிக்க, இது போன்ற ஊக்கத்தொகை வழங்கப்பட்டு வருகிறது. சேரும் மாணவர்களில், குலுக்கல் முறையில் ஒரு மாணவர் மட்டும் தேர்வு செய்யப்பட்டு அரை பவுன் தங்கம் வழங்கப்படுவதாக பள்ளித் தலைமை ஆசிரியர் தெரிவித்தார். இது பற்றி உயரதிகாரிகளுக்கு தகவல் அளித்திருக்கி றோம். அவர்களது வழிகாட்டுதலின் பேரில் உரிய நடவடிக்கை எடுக்கப் படும்” என்று கூறினார்.
மாணவர்கள் குறைவாக உள்ளபள்ளிகளை மூட அரசு முடிவெடுத் துள்ளதாக கடந்த 3 ஆண்டுகளாக கூறப்பட்டு வருகிறது. அந்த அச்சத்தில் தான் ஆசிரியர்கள் தங்கள்கைக்காசை செலவழித்து, இம்மாதிரியான நடடிவக்கைகளில் ஈடுபடு கின்றனர்.
இப்படி கவர்ச்சி விளம்பரத் திற்காக சேர்க்கப்படும் மாணவர்கள் இடையில் நின்று விட்டால் அதைப்பற்றி இந்த ஆசிரியர்கள் கவ லைப்படுவதில்லை. சேர்க்கைப் பட்டியலை அரசுக்கு அனுப்பும் போது குறைவாக இருக்கக் கூடாது என்பது மட்டுமே இவர்களின் இலக்கு என்று கல்வியாளர்கள் வருத்தத்துடன் தெரிவிக்கின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT