Published : 02 Jul 2020 07:04 AM
Last Updated : 02 Jul 2020 07:04 AM
பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு வழிகாட்டும் வகையில் ‘இந்து தமிழ்திசை’ நாளிதழ், ‘இ-ஸோன்’ (E ZONE) உடன் இணைந்து வழங்கும் ‘ரியல் லைஃப் சூப்பர் கிட்ஸ்’எனும் இணையவழி பயிற்சியின் 2-வது முகாம் ஜூலை 8-ம் தேதி தொடங்குகிறது.
ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்காக பல்வேறு செயல்பாடுகளை ஆன்லைன் வழியாக செய்து வருகிறது.
அந்த வகையில், ‘ரியல் லைஃப் சூப்பர் கிட்ஸ்’ எனும் முகாம் ஜூலை8-ம் தேதி தொடங்கி 3 நாட்கள் நடைபெறவுள்ளது. இம்முகாமில் 7 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட குழந்தைகள் அனைவரும் பங்கேற்கலாம். தினமும் மாலை 5 மணி முதல் 6 மணி வரை நடைபெறும்.
குழந்தைகளின் பலம், பலவீனம் எது? அவர்களது தேடல் என்ன? என்பதை உரையாடல் மூலம் கண்டறிவதும், குழந்தைகளிடம் மறைந்துள்ள திறன்களை வெளிப்படுத்தும் விதமாகவும் இந்த முகாமின் உரையாடல் அமையும். மூன்றாம்நாளில் குழந்தைகளின் பெற்றோருடன் பயிற்சியாளர் உரையாடுவார்.
இந்தியாவின் முதல் நாடக அடிப்படையிலான வாழ்க்கைப் பயிற்சியாளர் ஜே.எல்.ஜான் பிரதீப் இம்முகாமில் பங்கேற்று உரையாடஉள்ளார். இவர் குழந்தைகள் மற்றும் பெற்றோருடன் பணியாற்றுவதில் 10 ஆண்டுகளுக்கும் மேலானஅனுபவம் பெற்றவர்.
தியேட்டர் அடிப்படையிலான முறைகளைப் பயன்படுத்தி, குழந்தைகளுக்கு வேடிக்கையாகவும் உற்சாகமாகவும் பயிற்சி அளிக்கக்கூடியவர். அமெரிக்காவின் ‘பேஷன் ப்ளே இன்டர்நேஷனல்’,‘வேர்ல்ட் க்ளோன் அசோசியேஷன்’ ஆகிய அமைப்புகளிலும் இந்தியாவின் ‘ஸ்கூலோபிரீனர்’ போன்றவற்றிலும் இவர் உறுப்பினராக உள்ளார்.
இம் முகாமில் பங்கேற்க ரூ.294செலுத்தி, https://connect.hindutamil.in/rlsk.php என்ற லிங்கில் பதிவுசெய்து கொள்ளலாம். கூடுதல் தகவல்களுக்கு 9003966866 என்ற செல்பேசி எண்ணில் தொடர்புகொள்ளவும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT