Published : 14 Feb 2020 10:29 AM
Last Updated : 14 Feb 2020 10:29 AM
இந்தியா கிரிக்கெட் அணிக்கு இதுவரை கிடைத்த கேப்டன்களில் தோனிதான் மிகவும்சிறந்தவர் என்று சுரேஷ் ரெய்னா பாராட்டியுள்ளார்.
இந்திய அணியின் முன்னணிகிரிக்கெட் வீரர்களில் ஒருவரும்,சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக தற்போது ஆடி வருபவருமான சுரேஷ் ரெய்னா, ஐபிஎல் போட்டிகளில் ஆடுவதற்காக தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் அவர் கூறியிருப்பதாவது:
இந்திய அணிக்கு கிடைத்ததிலேயே மிகச் சிறந்த கேப்டன் மகேந்திர சிங் தோனிதான். அவரது தலைமையின் கீழ் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காகவும் தொடர்ந்து ஆடிவருவது மகிழ்ச்சியை அளிக்கிறது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இந்த ஆண்டு பியூஷ் சாவ்லா, ஹஸல்வுட், சாம் கரண், சாய் கிஷோர் என்று திறமைவாய்ந்த பல வீரர்கள் இணைந்துள்ளனர். அனுபவம் மிக்க வீரர்களையும், இளம் வீரர்களையும் கொண்ட மிகச்சிறந்த கலவையுடன் இந்த அணி விளங்குகிறது. எனவே ஐபிஎல் போட்டிகளில் மேலும் சிறப்பாக ஆடுவோம்.
இவ்வாறு சுரேஷ் ரெய்னா கூறினார்.
இப்போட்டியில் தென் ஆப்பிரிக்க அணியின் பந்துவீச்சாளரான நிகிடி 3 விக்கெட்களையும், பெலுக்வாயோ, ஹென்ரிக்ஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்களையும் வீழ்த்தினர். ஆட்ட நாயகனாக லுங்கி நிகிடி தேர்ந்தெடுக்கப்பட்டார்.
குளிர்கால விளையாட்டு லடாக்கில் நடக்கிறது
புதுடெல்லி
கேலோ இந்தியா குளிர்கால விளையாட்டுப் போட்டி இம்மாத இறுதியில் லடாக்கிலும், அதைத் தொடர்ந்து ஜம்மு காஷ் மீரிலும் நடைபெற உள்ளது. மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் கிரண் ரிஜ்ஜு செய்தியாளர்களிடம் இத்தகவலை தெரிவித்துள்ளார்.
இந்த குளிர்கால விளையாட்டுப் போட்டியில் ஐஸ் ஹாக்கி சாம்பியன்ஷிப், பிகர் ஸ்கேட்டிங், ஸ்பீட் ஸ்கேட்டிங் உள்ளிட்ட பல்வேறு வகையான விளையாட்டுகள் இடம்பெற உள்ளன. சுமார் 1,700 வீரர்கள் இப்போட்டியில் பங்கேற்கிறார்கள்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT