Published : 31 Jan 2020 07:59 AM
Last Updated : 31 Jan 2020 07:59 AM
தொகுப்பு: எஸ்.எஸ்.லெனின்
வணிகவியல் மாணவர்கள் கணிதத்தையும் ஒரு பாடமாக படித்திருந்தால் மட்டுமே புள்ளியியல் தொடர்பான கல்லூரி படிப்புகளில் சேர முடியும். தற்போது கணிதத்தின் இடத்தை ’வணிகக் கணிதம் மற்றும் புள்ளியியல்’ நிரப்பியதில் நிறைய மாணவர்கள் வணிகவியல் பிரிவில் சேர்ந்து,
’புள்ளியியல் துறை மற்றும் பட்டயக் கணக்காளர்’ உயர்கல்வி கனவுடன் பயின்று வருகின்றனர். அந்த வகையில் முக்கியத்துவம் வாய்ந்த இப்பாடத்தை சிரத்தையுடன் பயில்வது அவசியமாகிறது.
வினாத்தாள் அமைப்பு
90 மதிப்பெண்களுக்கான வணிகக் கணிதம் மற்றும் புள்ளியியல் பாடம், 4 பகுதிகளாக அமைந்துள்ளது. ஒருமதிப்பெண் பகுதியில் 20 வினாக்கள், சரியான விடையை தேர்ந்தெடுத்து எழுதுவதாக உள்ளது. 2 மற்றும் 3 மதிப்பெண் வினாக்கள் கொடுக்கப்பட்ட தலா 10 வினாக்களில் இருந்து தலா 7-க்கு விடையளிப்பதாகவும், அவற்றில் தலா ஒன்று கட்டாய வினாவாகவும் அமைந்திருக்கும். ‘அல்லது’ வகையிலான 7 வினாக்கள் 5 மதிப்பெண் பகுதியில் அமைந்துள்ளன.
தேர்ச்சி நிச்சயம்
பாடங்களின் பின்னுள்ள ஒரு மதிப்பெண் வினாக்களை தொகுத்துப் படிப்பதன் மூலமே அப்பகுதியில் கணிசமான மதிப்பெண்களை பெற்று விடலாம். பாடம் 1-ன் ‘மாறுதல் நிகழ்தகவு அணிகள் மற்றும் கிரேமரின் விதி’, பாடம் 2-ன் ‘வரையறுத்த தொகையீட்டை ஒரு கூட்டலின் எல்லை எனக் கொண்டு தொகை காணல்’, பாடம் 3-ன் ‘நுகர் உபரி, உற்பத்தியாளர் உபரி’, பாடம் 5-ன் ‘நியூட்டனின் முன்னோக்கு பின்னோக்கு, இலக்ராஞ்சியின் இடைச்செருகல்’ ஆகியவை தொடர்பான கணக்குகள் தேர்ச்சிக்கான மதிப்பெண்களை பெற்றுத் தரும். மேலும் கால்குலேட்டர் பயன்படுத்தி எளிமையாக தீர்க்கக்கூடிய கணக்குகள் அடங்கிய 9 மற்றும் 10 பாடங்களுக்கு முக்கியத்துவம் தந்துபடிப்பதன் மூலம் 90-க்கு 40 மதிப்பெண்களை எடுத்துவிடலாம்.
அதிக மதிப்பெண்களுக்கு
அதிக மதிப்பெண்களுக்கு அனைத்துப் பாடங்களையும் முழுமையாகப் படிப்பதும், அனைத்து வகையான வினாக்களுக்கும் உரிய முக்கியத்துவம் தருவதும் அவசியம். பாடத்தின் நுண் கருத்துக்களை ஆழ்ந்து படிப்பது, பாடக்கருத்துகளில் இருந்தே வினாக்களை உருவாக்கிப் படிப்பது போன்றவற்றுடன் ’இதர கணக்குப் பகுதி’, QR Code மற்றும் ICT Corner பகுதிகள் மூலமும் உருவாக்கப்பட்ட வினாக்களுக்கு தயாராகலாம்.
புதிய வினாத்தாள் மாதிரியின் அடிப்படையில், 20 சதவீதம் வரை ’உள்ளிருந்து / உருவாக்கப்பட்ட / உயர்சிந்தனைக்கான’ வினாக்கள் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தலா 2 ஐந்து மதிப்பெண் வினாக்கள் இடம்பெற சாத்தியமுள்ள பாடங்களான 1,3,4,9,10 ஆகியவற்றில் கூடுதல் கவனம் தேவை.
பாடங்களை புரிந்துகொண்டு படிப்பதும், கால்குலேட்டரை திறமையாக பயன்படுத்த பயிற்சி பெற்றிருப்பதும் இப்பாடத்தில் அதிக மதிப்பெண் பெற அடிப்படையாகும்.
திருப்புதலுக்கான நேரமிது
அரையாண்டுக்கு பிறகான நாட்களை பெருமளவு திருப்புதலுக்கே ஒதுக்க வேண்டும். அலகு வாயிலாகவும் பின்னர் அவற்றைத் தொகுத்துதொகுதிகள் வாயிலாகவும், திருப்புதலுக்கான தேர்வுகளை திட்டமிட்டு எழுதலாம். பொதுத்தேர்வுக்கு முன்பாக குறைந்தது 5 முழுத் தேர்வுகளை எழுதி பார்ப்பது முழு மதிப்பெண்ணை உறுதி செய்யும்.
நேர மேலாண்மை பழகுதல் அவசியம். திருப்புதல் தேர்வுகளில் புதுப்புது வினாக்களுக்கு பதில் எழுதிப் பார்ப்பது சிறப்பான பயிற்சியாக அமையும். ஆனால் பொதுத்தேர்வில் நன்கறிந்த வினாக்களுக்கு மட்டுமே முன்னுரிமை தந்து பதிலளிக்க வேண்டும்.
பொதுத்தேர்வுக்கான விடுமுறையில் அது வரையிலான தேர்வுகளின் விடைத்தாள்களை தொகுத்து, திருப்பிப் பார்ப்பது பிரத்யேகத் தவறுகளை தவிர்க்க உதவும்.
முக்கிய கணக்குகள்
’புளுபிரிண்ட்’ இல்லாத கலக்கமும்,அதனால் அனைத்துப் பாடங்களையும் முழுமையாக படித்தாக வேண்டிய மலைப்பும் மாணவர் மத்தியில் பரவலாக காணப்படுகிறது. அவர்களுக்கு உதவும் நோக்கில் மிகவும் முக்கியமான பாடப்பகுதிகள் இங்கு தரப்படுகின்றன. இவற்றுக்கு முன்னுரிமை தந்து படிப்பதன் மூலம் ஏனைய பாடப்பகுதிகளை படிப்பதற்கான தெளிவும், ஊக்கமும் கிட்டும்.
பாடம் 1: எடுத்துக்காட்டு கணக்குகள் 1.15, 1.16, 1.17, 1.18, 1.23. மாறுதல் நிகழ்தகவு அணிகள் தொடர்பான கணக்குகளும் முக்கியமானவை.
பாடம் 2: எ.க: 2.7, 2.12, 2.22, 2.23, 2.28, 2.31, 2.33, 2.35, 2.37, 2.39, 2.61, 2.64, 2.74, 2.78, 2.79, 2.80.
பயிற்சி கணக்குகள்: 2.2-ல் 2,3,8;2.3-ல் 1,8; 2.4-ல் 2,4; 2.5-ல் 6;2.9-ல் 3,4,5. வரையறுத்த தொகையீட்டை ஒரு கூட்டலின் எல்லை எனக்கொண்டு தொகை காணல் தொடர்பான கணக்குகள் முக்கியமானவை.
(எ.க- எடுத்துக்காட்டு கணக்குகள், ப.க- பயிற்சி கணக்குகள்)
பாடம் 3: எ.க: 3.4, 3.6, 3.7, 3.9, 3.14, 3.18, 3.17, 3.21, 3.23.
ப.க: 3.1-ல் 3,6; 3.2-ல் 2,5.
MR, MC தொடர்பான எளிய கணக்குகள்; நுகர்வோர் உபரி மற்றும் உற்பத்தியாளர் உபரி தொடர்புடைய கணக்குகள் முக்கியமானவை.
பாடம் 4: எ.க: 4.8, 4.10 - 4.14, 4.17-4.19, 4.23, 4.24, 4.28, 4.30-4.32.
ப.க: 4.4-ல் 7,9; 4.5-ல் 5,8,11,13.
பாடம் 5: (முன்னோக்கு, பின்னோக்கு)மற்றும் E பண்பு தொடர்பான நிரூபணம் மற்றும் விடுபட்ட உறுப்பு காணல் ஆகியவை 2 / 3 மதிப்பெண்களுக்கானவை. இலக்ராஞ்சியின் இடைச்செருகல் சூத்திரத்தை பயன்படுத்தும் கணக்குகள், நியூட்டனின் முன்னோக்கு, பின்னோக்கு கணக்குகள் முக்கியமானவை.
பாடம் 6: எ.க: 6.2, 6.5, 6.7, 6.11, 6.14, 6.19, 6.20, 6.23, 6.24.
ப.க: 6.1-ல் 2,6,9,10.
சராசரி மற்றும் மாறுபாட்டளவை கணக்குகள் முக்கியமானவை.
பாடம் 7: இயல்நிலை பரவல் தொடர்பான கணக்குகளில் கவனம் தேவை. எ.க: 7.3, 7.4, 7.7, 7.8, 7.10 - 7.13, 7.16 – 7.20.
ப.க: 7.1-ல் 6,7,12,13; 7.2-ல் 8,9,10.
பாடம் 8: நம்பிக்கை இடைவெளிகள் காணுதல் தொடர்பான கணக்குகள்,இன்மை கருதுகோள் ஏற்றுக் கொள்ளுதல் தொடர்பான கணக்குகள் முக்கியமானவை.
எ.க: 8.15, 8.17. ‘வரையறை’ முக்கியமானது.
பாடம் 9, பாடம் 10 ஆகியவற்றை முழுமையாக படிப்பது அவசியம்.
- பாடக்கருத்துகளை வழங்கியவர்: எஸ்.எஃப்.சுலைமான், முதுகலை ஆசிரியர் (கணிதம்), ‘வணிகக் கணிதம் மற்றும் புள்ளியியல்’ பாட நூலாசிரியர், அரசினர் மேல்நிலைப்பள்ளி, பள்ளிக்கரணை, சென்னை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT