Published : 03 Jan 2020 07:24 AM
Last Updated : 03 Jan 2020 07:24 AM
அரையாண்டு விடுப்பு முடிந்துஅனைத்துவித பள்ளிகளும் நாளை (ஜன.4) திறக்கப்படுகின்றன. முதல் நாளே மாணவர்களுக்கு பாடப்புத்தக்கங்கள், நோட்டுகள் வழங்கப்பட உள்ளன.
2-ம் பருவத்தேர்வு மற்றும் அரையாண்டுத் தேர்வு கடந்தடிச.11-ல் தொடங்கி 23-ம்தேதி முடிவடைந்தது. அதன்பின் அனைத்து பள்ளிகளுக்கும் ஜன. 3-ம் தேதி தொடர் விடு முறை அளிக்கப்பட்டது.
இதையடுத்து அரையாண்டு விடுமுறை இன்றுடன் நிறைவடைகிறது. இதைத்தொடர்ந்து நாளை (ஜன.4) முதல் பள்ளிகள் திறக்கப்படுகின்றன. பள்ளிகள் திறக்கப்படும் முதல் நாளே மாணவர்களுக்கு 3-ம் பருவ பாடப்புத்தகங்கள், நோட்டுகள் வழங்கப்பட உள்ளன.
இதற்காக அனைத்து பள்ளிகளுக்கும் தேவையான அளவுபுத்தகங்கள் மாவட்ட கல்வி அலுவலகம் மூலமாக ஏற்கெனவே அனுப்பப்பட்டுள்ளன. மேலும், பாடநூல்கள் முழுமையாக வழங்கப்பட்ட விவர அறிக்கையை முதன்மைக் கல்வி அதிகாரிகள்ஜன.8-ம் தேதிக்குள் பள்ளிக் கல்வித் துறைக்கு அனுப்ப அறிவுறுத்தப்பட்டுள்ளதாக துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT